Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

காளான் சாப்பிடுவதால் தொப்பைக் குறையும்

காளான் சாப்பிடுவதால் தொப்பையைக் குறையும்

வாசிப்புநேரம் -

காளான் சாப்பிடுவதால் தொப்பையைக் குறையும் என்பது ஒன்றில் தெரியவந்துள்ளது..

தைவானில் உள்ள பல்கலைகழக ஆய்வாளர்கள் சிலவகை காளான்களைப் பரிசோதித்தனர். அப்பரிசோதனையில் காளானிற்கு குடலில் உள்ள ஆரோக்கியமற்ற கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. 

மேலும் குடலில் இருக்கும் ஆரோக்கியமற்ற கிருமிகள் தான் தொப்பை வருவதற்கு காரணம் என்றும் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியில் காளானில் உள்ள சத்துக்களானது உடலில் கொழுப்புக்கள் தங்குவதைத் தடுப்பதோடு, இதர பிரச்சனைகளான இன்சுலின் பிரச்சனை, கல்லீரல் நோய்கள், புற்றுநோய், தூக்கமின்மை, டைப்-2 நீரிழிவு போன்றவற்றையும் குறைப்பதாக தெரியவந்தது.

உலகில் சுமார் 500 மில்லியன் பேர் தொப்பையாலும், 1.4 பில்லியன் பேர் உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தங்களின் உணவில் காளானை அதிகம் சேர்த்தாலே போதும், எடை தானாகக் குறையும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்..

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்