Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை உண்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை நீங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வீர்களா?

வாசிப்புநேரம் -
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை உண்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்

(படம்: REUTERS/ Rick Wilking)

பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை நீங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வீர்களா?

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட செய்தி உங்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம்.

Hot dog bacon salami போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை உண்டால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்று அமைப்பு உறுதிசெய்துள்ளது.

ஒவ்வொரு நாளும் நீங்கள் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்டால் போதும்.

 உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 18 விழுக்காடு அதிகரிக்கும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியும் சிவப்பு மாமிசமும் பெருங்குடல் இரைப்பை புற்றுநோய் உள்ளிட்ட புற்றுநோய்களை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

புகைப் பிடிக்கும் போதும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் சாப்பிடும்போதும் அதே அளவில் புற்றுநோய் ஆபத்து ஏற்படுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் புற்றுநோய் அமைப்பு பல ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்திய பிறகு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

பதப்படுத்தப்பட்ட இறைச்சியின் அபாயம் பற்றி, அமைப்பு இதுவரை இந்த அளவுக்கு உறுதியாக எச்சரித்ததில்லை. 

பல ஆண்டுகளாக மருத்துவர்கள் விடுத்துவந்த எச்சரிக்கைகளுக்கு ஆதாரமும் வலுவும் சேர்ந்துள்ளன. 

ஆண்டுதோறும் 34,000 புற்றுநோய் மரணங்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்