Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"தண்ணீர் குடிங்க" உடல் பருமனைக் குறைக்க

நாம் உணவை உண்ணுவதற்கு முன் நன்றாக தண்ணீர் அருந்தினால், உடல் எடையைக் குறைக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வாசிப்புநேரம் -

நாம் உணவை உண்ணுவதற்கு முன் நன்றாக தண்ணீர் அருந்தினால், உடல் எடையைக் குறைக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெர்மிங்ஹேம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள்.  உடல் எடையைக் குறைப்பதற்கு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

அதற்கான ஆய்வில் 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்களில் 41 பேர் சாப்பாட்டிற்கு முன் ஒரு பாட்டில் தண்ணீர் குடிக்க வைக்கப் பட்டனர்.

மீதமுள்ள 43 பேர் சாப்பிட்டதற்குப் பின் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப் பட்டனர்.
12 வாரங்கள் அந்த முறை பின்பற்றப் பட்டது.

ஆய்வின் முடிவில், உணவு உண்பதற்கு முன்பு தண்ணீர் குடித்தவர்களின் உடல் எடை 4.3 கிலோ வரை குறைந்து இருந்தது.

ஆனால், சாப்பிட்டு விட்டு தண்ணீர் குடித்தவர்களுக்கு வெறும் 1.3 கிலோ மட்டுமே எடை குறைந்து இருந்தது தெரிய வந்தது.

அதன்மூலம், சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை கணிசமாக குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளன்னர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்