Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உடலுறுப்புகளின் அறிகுறிகளை வைத்து நோயைக் கண்டுபிடிக்க முடியுமா? - பாகம் 4

1. விரல் முட்டிகளில் வலி … என்ன பிரச்சினை? ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. அதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். அந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான்காணப்படும். 

வாசிப்புநேரம் -

1. விரல் முட்டிகளில் வலி … என்ன பிரச்சினை?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. அதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். அந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான்காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், அந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே அந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
என்ன செய்யலாம்:  உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் டி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

2. நகங்களில் குழி விழுதல் … என்ன பிரச்சினை?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
என்ன செய்யலாம்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
3. வாய், ஈறுகளில் இரத்தம் வடிதல் … என்ன பிரச்சினை?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
என்ன செய்யலாம்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது. 
4. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் … என்ன பிரச்சினை?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக மனவுளைச்சல் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
என்ன செய்யலாம்: ‘மல்டி விட்டமின மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் மனவுளைச்சலைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் தொற்று  குறைந்து வாய்ப்புண் ஆறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்