Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

உணவில் செயற்கைக் கொழுப்புச் சத்து சேர்ப்பதற்கு அமெரிக்கா தடை

உணவில் செயற்கைக் கொழுப்புச் சத்து சேர்ப்பதைத் தடைசெய்யப் போவதாக அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. இதய நோய் ஏற்படும் அபாயத்தை, செயற்கைக் கொழுப்பு உயர்த்துவதால் நிர்வாகம் அந்த முடிவை எடுத்துள்ளது. 

வாசிப்புநேரம் -

உணவில் செயற்கைக் கொழுப்புச் சத்து சேர்ப்பதைத் தடைசெய்யப் போவதாக அமெரிக்காவின் உணவு, மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. இதய நோய் ஏற்படும் அபாயத்தை, செயற்கைக் கொழுப்பு உயர்த்துவதால் நிர்வாகம் அந்த முடிவை எடுத்துள்ளது.

ஹைட்ரஜன் கலந்த எண்ணெய் வகைகள் செயற்கைக் கொழுப்பின் மூலப்பொருளாகக் கருதப்படுகின்றன. எண்ணெயைக் கெட்டியாக்குவதற்காக ஹைட்ரஜன் வாயு கலக்கப்படுகிறது.

அவ்வகை எண்ணெய் சேர்க்கப்படும் உணவு, கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. உணவு, மருந்து நிர்வாகத்தின் புதிய விதிமுறைகளின் கீழ் அவற்றின் பயன்பாடு கட்டுப்படுத்தப்படும்.
உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றின் உணவுப் பொருட்களை மூன்று ஆண்டு காலத்திற்குள் மாற்றியமைக்கலாம். அல்லது செயற்கைக் கொழுப்பின் பயன்பாட்டை அனுமதிக்கும்படி உணவு, மருந்து நிர்வாகத்திடம் தனிப்பட்ட முறையில் விண்ணப்பம் செய்யலாம்.

மூன்று ஆண்டு காலவரையறைக்குப் பிறகு செயற்கைக் கொழுப்பு உணவில் சேர்க்கப்படுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுவிடும். இயற்கையான கொழுப்புச் சத்துள்ள இறைச்சி, பால் வகைகளுக்கு நிர்வாகத்தின் விதிமுறைகள் பொருந்தா.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம் பல்லாயிரம் மாரடைப்புகளையும், மரணங்களையும் தவிர்க்கலாம் என்று நிர்வாகம் நம்பிக்கை கொண்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்