Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

செயற்கை நகைகள்-எப்படிப் பாதுகாக்கலாம்?

செயற்கை நகைகள் நீண்ட நாள் நிலைத்திருக்க என்ன செய்யலாம்?

வாசிப்புநேரம் -
செயற்கை நகைகள்-எப்படிப் பாதுகாக்கலாம்?

(படம்: Pixabay)

நகை என்றாலே அழகோ அழகு! அவை பெண்களின் நெருங்கிய தோழிகளைப் போன்றவை.

இன்றைய காலகட்டத்தில் தங்க நகைகளைவிட செயற்கை நகைகளே பெண்களிடையே பிரபலமாக உள்ளன.

பல்வேறு வண்ணங்களில், வடிவமைப்பில் செயற்கை நகைகள் இன்று சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை அதிக விலை கொடுத்தும் வாங்குகிறோம்.

எனவே அவற்றை முறையாகப் பராமரிப்பதும் அவசியமாகிறது. செயற்கை நகைகள் நீண்ட நாள் நிலைத்திருக்க என்ன செய்யலாம்?

வாசனைத் திரவம் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்

(படம்: Pixabay)

வாசனை திரவத்தில் கலந்திருக்கும் இரசாயனப் பொருட்கள் நகையின் வண்ணத்தைக் குலைக்கும். மேலும் அதில் பொருத்தப்பட்டிருக்கும் கற்களின் பிரகாசமும் மங்கிப் போக வாய்ப்பிருக்கிறது.

நகை அணிந்துகொண்டே குளிப்பதைத் தவிர்த்துவிடுங்கள்

(படம்: Pixabay)

நகையில் அதிக நேரம் தண்ணீர் பட்டால், அது சீக்கிரம் சேதமாகிவிடும். ஆகையால் செயற்கை நகைகளை அணிந்துகொண்டே குளிப்பதையோ, முகம், கை கால் கழுவுவதையோ தவிர்க்க வேண்டும்.

நகையை எப்படிச் சுத்தம் செய்வது?

(படம்: Pixabay)

மிதமான சூடுள்ள நீரில் மட்டுமே நகையைச் சுத்தம் செய்யவேண்டும். அழுக்கு தென்பட்டால், மென்மையான துணி ஒன்றில் இலேசாக சவக்காரத்தைச் சேர்த்து நகையைத் தேய்த்துப், பின் உடனே கழுவிக் காயவைக்கவேண்டும்.

பயன்படுத்தாத நகையை அவ்வப்போது ஒரு முறை எடுத்துப் பாருங்கள்

நகைக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால், அப்போது தெரியவரும். நகைகள் மேலும் சேதமாவதற்கு முன்னர், கவனித்துவிடமுடியும்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்