Images
  • Aspirin
    (படம்: Pixabay)

'Aspirin' மாத்திரைகளைத் தினமும் உட்கொள்வது அபாயத்தை விளைவிக்கக்கூடும்


காய்ச்சல், வலி, வீக்கம் ஆகியவற்றுக்காக உட்கொள்ளப்படும் 'aspirin' மாத்திரைகளை அன்றாடம் எடுப்பது ஆபத்து விளைவிக்கலாம் என்று அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு கூறுகின்றது.

மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் 'aspirin' மாத்திரைகளை உட்கொள்வது அவர்களுக்கு நல்ல பயன்களை அளிக்கக்கூடும்.

இரத்தம் கெட்டியாக இருக்கும்போது அதன் ஓட்டம் பாதிப்படைகிறது. அதனை அகற்றி இரத்த ஓட்டத்தைச் சீர் செய்கிறது 'aspirin'.

இதனால் மருத்துவர்கள் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு 'aspirin' மாத்திரைகளைப் பரிந்துரைக்கின்றனர்.

ஆனால், மருத்துவர் பரிந்துரைத்த காலம் கடந்தும் அல்லது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 'aspirin' மாத்திரைகளை உட்கொள்கின்றனர் சிலர்.

இதனால், உள்ளுறுப்புகளில் இரத்தக் கசிவு ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த இரத்தக் கசிவு சில வேளைகளில் ஒருவரது உயிருக்கே ஆபத்து விளைவிக்கலாம்.

மேலும் 70 வயதிற்கு மேம்பட்டவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தும் அம்மாத்திரைகளை உட்கொண்டால், அதனால் அவர்களுக்கு எந்தவித பயனும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

Top