Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Avengers: Endgame திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டுகள் புதன்கிழமையிலிருந்து விற்பனை

Avengers திரைப்பட ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருக்க வேண்டாம். சிங்கப்பூரில் அந்தத் திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனை புதன்கிழமை தொடங்குகிறது.  

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

Avengers திரைப்பட ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருக்க வேண்டாம். சிங்கப்பூரில் அந்தத் திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டுகள் விற்பனை புதன்கிழமை தொடங்குகிறது.

காலை 9.30 மணியிலிருந்து அனைத்துத் திரையரங்குகளிலும் நுழைவுச்சீட்டுகளை வாங்கலாம்.

ஏப்ரல் 24இல் வெளியிடப்படும் படத்திற்கு பிரபலமான மற்ற படங்களைப் போல (ஏப்ரல் 23) முதல்நாள் இரவு முன்னோட்டக் காட்சி இருக்காது.

படம் வெளியிடப்படுவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் வேளையில், ரசிகர்களிடையே பரபரப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் eBay தளத்தில் ஒரு நுழைவுச்சீட்டின் மறுவிற்பனை விலை சுமார் 9,000 டாலர்.

அமெரிக்காவில் நுழைவுச்சீட்டு விற்பனை இம்மாத 2ஆம் தேதி தொடங்கியது. ஆறு மணிநேரத்தில் சாதனை அளவுக்கு நுழைவுச்சீட்டுகள் விற்று முடிந்தன.

சுமார் 10 ஆண்டுகாலமாக வெளியிடப்பட்ட 21 படங்கள் ஒன்று சேர்ந்து முடிவுறும் Avengers திரைப்படத்தின் இறுதிப் பாகம் Avengers: Endgame.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்