Images
  • avengers trailer (1)

பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவென்ஜர்ஸ் 4 படத்தின் முன்னோட்டம்

அவென்ஜர்ஸ் 4 திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்றிரவு ( டிசம்பர் 7) YouTubeஇல் வெளியிடப்பட்டது. வெளிவந்த 24 மணிநேரத்துக்குள் சுமார் 37 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.

இரண்டரை நிமிட நீளமுள்ள காணொளியில் அவென்ஜர்ஸ் 3 படத்தில் தப்பிப் பிழைத்த கதாபாத்திரங்கள் தோன்றுகின்றனர்.

மூன்றாம் படத்தின் இறுதியில் சுமார் பாதிக் கதாபாத்திரங்கள் அழிக்கப்பட்டன. அடுத்து வரும் படங்களின் நிலைமை என்னவென்று ரசிகர்ளின் மனத்தில் கேள்வி எழுந்துள்ளது.


படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய முன்னோட்டம் சமூக ஊடகங்களில் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Top