Images
  • bacterua
    (படம்: Gaya Chandramohan)

கிருமிகள்...கிருமிகள்...எங்கே, எவ்வளவு?

(படங்கள்: காயா சந்திரமோகன்)

இன்று எதைத் தொட்டீர்கள்? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

அனைத்துக்கும் கைகளைத் தான் பயன்படுத்துகிறோம். கதவைத் திறக்க, தட்டச்சு செய்ய, பணத்தை எடுக்க, மின் படிக்கட்டுகளில் விழுந்துவிடாமல் பிடித்துக்கொள்ள, பேருந்துகள் ரயில்களில் கைப்பிடிகளைப் பிடித்துக்கொள்ள, பெரும்பாலான நேரங்களில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்த....

உலகில் சுமார் 80 விழுக்காட்டு நோய்த்தொற்றுகள் கைகளின் மூலமாகவே ஏற்படுவதாய் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையம் கூறுகிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களைத் தொடும்போது கைகளில் எவ்வளவு கிருமிகள் ஒட்டிக்கொள்கின்றன? ஆராய்ச்சியில் இறங்கினார், சேனல் நியூஸ் ஏஷியா நிருபர் காயா சந்திரமோகன்.

சிங்கப்பூர் தேசியப் பல்கலையில் நுண்-உயிரியல் இணைப்பேராசிரியர் டாக்டர் கிரிஸ் ஷாம், ஆராய்ச்சிக்கு உதவினார்.

கழுவாத கை, கழுவிய கை - வித்தியாசம்


கைத்தொலைபேசியைத் தொட்ட கை:


பேரங்காடியின் தள்ளுவண்டி கைப்பிடியைத் தொட்டபின்:


கோப்பிக்கடை உணவுப் பட்டியல்:


அலுவலகத்தில் சாமான் கழுவும் பஞ்சு:


கிருமிகளைத் தவிர்ப்பது சாத்தியமன்று; ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். அவ்வப்போது கைகளைச் சோப்புகள் கொண்டு சுத்தம் செய்வது அதற்கு உதவும்.

என்றார் டாக்டர் ஷாம்.  

Top