Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தலைமுடி உதிரும் பிரச்சினை உள்ளவர்களுக்குப் புதிய தீர்வு?

எலும்புத் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சோதனையிலிருந்த மருந்து ஒன்று முடி உதிரும் பிரச்சினைக்குத் தீர்வாக மாறியுள்ளது. 

வாசிப்புநேரம் -
தலைமுடி உதிரும் பிரச்சினை உள்ளவர்களுக்குப் புதிய தீர்வு?

(படம்: Pixabay)

எலும்புத் தேய்மானத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சோதனையிலிருந்த மருந்து ஒன்று முடி உதிரும் பிரச்சினைக்குத் தீர்வாக மாறியுள்ளது.

SFRP1 எனும் புரதம் திசுக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது.

தலைமுடி வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அதை Way-316606 எனும் அந்தப் புதிய மருந்து மூலம் செயலிழக்கச் செய்யலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முடி உதிர்ந்து வழுக்கைத் தலை ஏற்படுபவர்களுக்குத் தற்போது வழங்கப்படும் மருந்துகளால் பக்க விளைவுகள் உண்டாகக்கூடும்.

மேலும் அவை அதிகப் பலனளிப்பதில்லை என்று கூறப்படுகிறது.

புதிய மருந்து தற்போது சோதனையில் உள்ளது.

அது மக்களுக்குப் பாதுகாப்பானதாகவும் பயனளிப்பதாகவும் இருக்குமேயானால் முடி உதிரும் பிரச்சினையை எதிர்நோக்குபவர்களுக்கு மருந்து பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்