Images
  • v
    (படம்: Instagram/Banksy via REUTERS)

கொரோனா பரவலுக்கு இடையிலும் கைவண்ணம் காட்டும் மர்ம ஓவியர்

உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் மர்ம ஓவியர் பான்ஸ்கி (Bansky) COVID-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு இடையிலும் தமது முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை.

உலகில் மில்லியன்கணக்கானோர் இப்போது வீட்டிலிருந்து வேலை செய்கின்றனர். அது போல வீட்டில் தமது கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார் பான்ஸ்கி.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம்....கழிவறை.

நான் வீட்டிலிருந்து வேலை செய்தால் என் மனைவிக்கு அறவே பிடிக்காது

என்ற வாசகங்களுடன் தமது ஓவியங்களை Instagram பக்கத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்.

View this post on Instagram

. . My wife hates it when I work from home.

A post shared by Banksy (@banksy) on


அவரது ரசிகர்களுக்குப் பரிச்சயமான எலி புதுமையாகப் பல குறும்புகள் செய்வதுபோல் அவர் தீட்டியிருக்கும் ஓவியங்கள் இணையவாசிகளைப் பரவசப்படுத்தியிருக்கின்றன.

1990களில் புகழ்பெறத் தொடங்கிய பான்ஸ்கி இதுவரை தான் யார் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தாமல் மர்மமாகவே வைத்திருக்கிறார்.  

Top