Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Batmanக்கு COVID-19 நோய்த்தொற்று

The Batman படத்தில் பேட்மேனாக நடித்து வரும் நடிகர் ராபர்ட் பெட்டின்ஸனுக்கு (Robert Pattinson) COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
Batmanக்கு COVID-19 நோய்த்தொற்று

(படம்: AFP / ANDER GILLENEA)

The Batman படத்தில் பேட்மேனாக நடித்து வரும் நடிகர் ராபர்ட் பெட்டின்ஸனுக்கு (Robert Pattinson) COVID-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

படத்தைத் தயாரித்து வரும் வார்னர் பிரதர்ஸ் (Warner Bros) நிறுவனம், அந்தப் படக் குழுவில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதியானதாகத் தெரிவித்தது.

அதனால், பிரிட்டனில் நடந்து வந்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக அது கூறியது.

பாதிக்கப்பட்டவரின் பெயரை அது குறிப்பிடவில்லை.

இருப்பினும், the Hollywood Reporter, Vanity Fair, The New York Times ஆகிய செய்தி நிறுவனங்கள் அவர் படத்தின் நாயகன் என்று குறிப்பிட்டன.

கொரோனா கிருமித்தொற்றால் சுமார் 6 மாதங்கள் நின்றுபோன படப்பிடிப்பு, சில நாள்களுக்கு முன் தான் மீண்டும் தொடங்கியது.

மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்கிய முதல் சில பெரிய படத் தயாரிப்புகளில் The Batmanனும் ஒன்று.

மார்ச் மாதத்தில், அந்தப் படத்தில் பணியாற்றிய Andrew Jack என்ற நடிகர் கிருமித்தொற்றால் மாண்டார்.

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளிவர இருந்த அந்தப் படம், இனி அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் தான் வெளிவரும் என்று கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்