Images
  • campfire
    படம்: Pixabay 

பழையன கழிதலையும் புதியன புகுதலையும் போற்றும் போகி

தைப் பொங்கலுக்கு முன்தினம் போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்கள் அகற்றப்படும். புதியவை வீட்டை அலங்கரிக்கும்.

'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்பதை நிலைநிறுத்தும் நன்னாள்.


ஒரு காலத்தில் அந்நாள் 'போக்கி' என்றழைக்கப்பட்டது. பழைய பொருட்கள் மட்டுமின்றி துன்பங்களையும் மனக்கவலைகளையும் அழித்து போக்க வேண்டும் என்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்தச் சொல் 'போகி' என்று மருவியது.

சிங்கப்பூரில் பொங்கலைக் கொண்டாடும் இல்லங்களில், இன்று வீட்டைத் துப்புரவு செய்யும் பணி மும்முரமாக நடைபெறும்.


Top