Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'Black Friday' - எப்படி உருவானது?

கிறிஸ்துமஸ் அன்பளிப்புகளையும் அலங்காரப் பொருள்களையும் வாங்கி கொண்டாட்ட உணர்வைத் தொடங்கும் ஒரு நாளாகிவிட்டது 'Black Friday'. 

வாசிப்புநேரம் -
'Black Friday' - எப்படி உருவானது?

(படம்: Pixabay)

சில வாரங்களுக்கு முன் ஒற்றையர் தினத்தை முன்னிட்டுப் பலதரப்பட்ட பொருள்களும் சேவைகளும் மலிவு விலையில் விற்கப்பட்டன.

ஒற்றையர் தினத்தன்று வாங்கிய பொருள்களே வீட்டில் குவிந்திருக்கும்.

அதற்குள் இன்று 'Black Friday' தள்ளுபடிகள் தொடங்கிவிட்டன.

அமெரிக்காவில் தொடங்கிய இந்த வழக்கம் இன்று உலக நாடுகள் பலவற்றிலும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

கிறிஸ்துமஸ் அன்பளிப்புகளையும் அலங்காரப் பொருள்களையும் வாங்கி கொண்டாட்ட உணர்வைத் தொடங்கும் ஒரு நாளாகிவிட்டது 'Black Friday'.


'Black Friday' என்ற பெயர் எப்படி உண்டானது?

(படம்: Pixabay)


'Black Friday' என்ற பெயர் முதன்முதலில் 1869இல் அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி நிலையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

ஜே கூல்ட், ஜிம் ஃபிஸ்க் (Jay Gould, Jim Fisk) எனும் இரு Wall Street நிதியாளர்கள் அமெரிக்கத் தங்கத்தைக் கணிசமான அளவு வாங்கியிருந்தனர்.

ஆனால் அவர்களுடைய நம்பிக்கைக்கு மாறாக அமெரிக்கத் தங்க விலை ஒரே நாளில் 20 விழுக்காடு சரிந்தது.

இதனால் Wall Steet நொடித்துப்போனது.

இதனால் 1869 செப்டம்பர் 24 என்ற அந்த வெள்ளிக்கிழமை 'Black Friday' என அழைக்கப்பட்டது.

ஆனால் பொருள் வாங்குவதுடன் அந்தப் பெயரைத் தொடர்புபடுத்தப் பல ஆண்டுகள் ஆயின.

பொருள் வாங்குவதுடன் எப்படித் தொடர்பு?

(படம்: Pixabay)

அமெரிக்க ராணுவத்தினரும் கடற்படையினரும் நவம்பர் மாதத்தில் காற்பந்து விளையாடுவார்கள்.

அதைக் காண மக்கள் பலர் திரளுவர்.

அவர்களைக் கண்காணிக்க காவல்துறை அதிகாரிகள் அதிகம் தேவை.

அதிகாரிகள் விடுப்பு இல்லாமல் வேலைக்குப் போவதைக் குறிக்க, 1960களில் அந்நாளை 'Black Friday' என அழைக்கத் தொடங்கினர்.

அதே வேளையில் அதிக எண்ணிக்கையில் கூடும் மக்களைக் கவர்ந்தால் பொருள்களைக் கூடுதலாக விற்கலாம் என்ற நோக்கத்துடன் கடைகள் செயல்பட்டன.

கொஞ்ச நாளில் 'Black Friday' என்ற பெயரில் மலிவு விற்பனை விளம்பரங்கள் நாளிதழ்களில் அச்சிடப்பட்டன.

தற்போது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையன்று 'Black Friday' இடம்பெறுகிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்