Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Black Panther திரைப்படத்தின் கதாநாயகர் Chadwick Boseman புற்றுநோயால் மரணம்

ஹாலிவுட் திரைப்பட நடிகர் செட்விக் போஸ்மன் (Chadwick Boseman) மலக் குடல் புற்றுநோயால் நேற்று மாண்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர், 

வாசிப்புநேரம் -
Black Panther திரைப்படத்தின் கதாநாயகர் Chadwick Boseman புற்றுநோயால் மரணம்

(படம்: AFP / VALERIE MACON)

ஹாலிவுட் திரைப்பட நடிகர் செட்விக் போஸ்மன் (Chadwick Boseman) மலக் குடல் புற்றுநோயால் நேற்று மாண்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்,

42 வயதான அவர், 2018இல் வெளியான பிரபல Black Panther திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்தார்.

அந்தத் திரைப்படம், கறுப்பினத்தவரை முதன்மைக் கதாபாத்திரமாகக் கொண்டுள்ள முதல் ஹாலிவுட் சூப்பர்ஹீரோ திரைப்படம்.

அவருக்கு 2016ஆம் ஆண்டு அவருக்குப் புற்றுநோய் இருந்தது தெரியவந்தது.

இருப்பினும், அதுபற்றி அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. உடல்நிலையைப் பொருட்படுத்தாமல், திரைப்படங்களில் அவர் தொடர்ந்து நடித்துவந்தார்.

புற்றுநோய்க்கான பலவித சிகிச்சைகளுக்கு இடையிலும், மன உறுதியோடு அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்ததாக அவரது குடும்பத்தார் கூறினர்.

அவர், தமது மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் அருகிலிருக்க, வீட்டிலேயே காலமானார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்