Images
  • riddle

மூளைக்கு வேலை... இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியுமா?

உடலுக்கு உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அறிவுற்கும் பயிற்சி முக்கியம். இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியுமா?


1) ஒரு குடும்பத்தில் மகன்களும், மகள்களும் உள்ளனர். ஒவ்வொரு மகனுக்கும் ஒரே எண்ணிக்கையில் சகோதரர்களும் சகோதரிகளும் உள்ளனர். ஒவ்வொரு மகளுக்கும் சகோதரிகளைப் போன்று சகோதரர்கள் இரு மடங்கு  உள்ளனர். அந்தக் குடும்பத்தில் எத்தனை மகன்கள், எத்தனை மகள்கள் இருக்கின்றனர்?

2) கடிகாரத்தில் உள்ள சிறிய முள்ளும் பெரிய முள்ளும் ஒருநாள் நள்ளிரவுக்கும் மறுநாள் நள்ளிரவுக்கும் இடையே எத்தனை முறை ஒன்றையொன்று கடந்து செல்கின்றன?

3) மாலாவுக்கு வயது 13. அவள் தந்தையின் வயது 40. எத்தனை ஆண்டுகளுக்குமுன் தந்தையின் வயது மாலாவின் வயதில் நான்கு மடங்காக இருந்தது?


விடைகள் இன்றிரவு வெளியிடப்படும்...தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள்

Top