Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மார்பகப் புற்றுநோயாளிகள் குணமடைவதை BRCA மரபணுவில் இருக்கும் கோளாறு பாதிக்காது

BRCA மரபணுவில் கோளாறு இருப்பது மார்பகப் புற்றுநோயாளிகள் குணமடைவதைப் பாதிக்காது என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
மார்பகப் புற்றுநோயாளிகள் குணமடைவதை BRCA மரபணுவில் இருக்கும் கோளாறு பாதிக்காது

(படம்: Pixabay)

BRCA மரபணுவில் கோளாறு இருப்பது மார்பகப் புற்றுநோயாளிகள் குணமடைவதைப் பாதிக்காது என்று ஒரு புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வில் சுமார் 3000 பெண்கள் கலந்துகொண்டனர்.

எந்தவித சிகிச்சையை மேற்கொண்டாலும் BRCA மரபணுவில் கோளாறு இருக்கும் புற்றுநோயாளிகள் குணமடையும் சாத்தியமும் BRCA மரபணுவில் கோளாறு இல்லாதவர்கள் குணமடையும் சாத்தியமும் ஒன்றே என்கின்றன ஆய்வு முடிவுகள்.

இதனால் புற்றுநோயினால் மார்பகத்தை அறுவைசிகிச்சை மூலம் அகற்றும் பெண்கள் அதைப் பற்றி யோசிக்க கூடுதல் கால அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் புற்றுநோய் வருவதற்குமுன் BRCA மரபணுவில் கோளாறு இருப்பதைக் கண்டறிந்து அறுவைசிகிச்சை செய்துகொள்வது புற்றுநோய் வருவதைத் தடுக்குமா என்பதைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை.

BRCA1 மற்றும் BRCA2 மரபணுவில் ஏற்படும் கோளாறுகள் மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடிய சாத்தியத்தை 4இலிருன்து 4 மடங்கு அதிகமாக்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்