Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

ரொட்டியில் வெண்ணெயைச் சரியாகத் தடவி வருகிறீர்களா?

ரொட்டியில் வெண்ணெயைத் தடவுவது பற்றி நம்மில் எவரும் பெரிதும் கவனித்திருக்கமாட்டோம்.

வாசிப்புநேரம் -

ரொட்டியில் வெண்ணெயைத் தடவுவது பற்றி நம்மில் எவரும் பெரிதும் கவனித்திருக்கமாட்டோம்.

ஆனால் ரொட்டியில் வெண்ணெய் தடவுவதற்கும் சரியான வழி உள்ளது என்கிறார் பிரான்சில் காலங்காலமாக வெண்ணெய் தயாரித்து வரும் ஜான் யீவ்ஸ்-போர்டியர் (Jean-Yves Bordier).

கூம்பு வடிவத்தில் உள்ள, கையால் தயாரிக்கப்பட்ட வெண்ணெய்க்குப் பிரசித்திப் பெற்றவர் அவர். 1985இலிருந்து வெண்ணெயைத் தயாரித்து வருகிறது அவரின் குடும்பம்.

ரொட்டியில் வெண்ணெயைத் தடவும் போது அதிகப் பற்கள் உள்ள கத்தியின் பகுதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நேராக உள்ள பக்கத்தைப் பயன்படுத்துமாறு ஆலோசனை கூறுகிறார். அல்லது கத்தியின் நுனியைப் பயன்படுத்துமாறு சொல்கிறார்.

ரொட்டியில் வெண்ணெயை எடுத்து நன்கு தடவுவதற்குப் பதிலாக சிறு துண்டு ரொட்டியில் வெண்ணெயைக் கொஞ்சமாக அள்ளி வைக்குமாறு கூறுகிறார்.

அவ்வாறு செய்யும்போது வெண்ணெயின் முழுச் சுவை வெளிப்படும் என்கிறார் போர்டியர்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்