Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சரியாக மூச்சு விடுவது எப்படி - அதற்குரிய பயிற்சிகள்

ஒருவர் மூச்சு விடும் விதம், அவரது எடை, உடல் நலம், மன நிலை, கவனம் போன்ற பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.  

வாசிப்புநேரம் -
சரியாக மூச்சு விடுவது எப்படி - அதற்குரிய பயிற்சிகள்

படம்: Pixabay

ஒருவர் மூச்சு விடும் விதம், அவரது எடை, உடல் நலம், மன நிலை, கவனம் போன்ற பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

மனிதர்கள் ஒரு நாளில் சராசரியாக சுமார் 25,000 முறை மூச்சு விடுகிறோம். ஆனால் அதை அனைவரும் முறையாகச் செய்கிறோமா?

வாயை மூடி மூச்சு விடவும்

நம்மில் சுமார் 50 விழுக்காட்டினர் வாய்வழியே மூச்சை இழுத்து விடுகிறோம். அதனால் உடலுக்குத் தீங்கு விளையக்கூடும்.

வாய்வழியே மூச்சுவிடுவதால் ஏற்படும் தீமைகள்:

  • சுவாசம் சார்ந்த நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகளை அது அதிகமாக்கும்
  • வாய்வழியே மூச்சுவிடுவது வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
  • நுரையீரல் பாதிக்கப்படலாம்.

மூக்குவழியே மூச்சுவிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

  • மூக்குவழியே மூச்சுவிடுவது உடலுக்குள் செல்லும் காற்றைத் தூய்மைப்படுத்தும்.
  • உயிர்வாயுவை மேலும் உள்வாங்கிக்கொள்ள உதவும்.
  • உடலை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும்.
  • உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம் (உடலின் ஆற்றலைக் கொண்டே நாம் மூச்சுவிடுகிறோம். மூச்சு விடுவது ஒருவிதத்தில் உடற்பயிற்சி செய்வதைப் போன்றதே.)

மூக்குவழி மூச்சுவிடுவதில் என்னென்ன சவால்கள் நேரலாம்:

  • மூக்கடைப்பால் அடிக்கடி பாதிக்கப்படுவோர், வாய்வழியே மூச்சுவிடுவதைத் தவிர்ப்பது கடினம்

அதற்கான தீர்வு:

  • மூக்கின் அடியில் இயூகலிப்டஸ் எண்ணெயைத் தேய்க்கலாம்.

மூக்கடைப்பை அகற்றுதல் :

  1. நேரே அமர்ந்து, மெதுவாகக் சுவாசிக்கவும்
  2. மூக்கின் இரு பகுதிகளை விரல்களைக் கொண்டு பிடித்து மூடவும்
  3.  மூச்சுத் தேவைப்படும் வரை தலையை மேலும் கீழுமாகவோ, இட, வலமாகவோ அசைக்கவும்.
  4. மூக்கின்மேல் உள்ள விரல்களை எடுத்து விட்டு மூக்குவழியே முச்சுவிடவும்
  5. இதை ஐந்து முறை செய்துபார்க்கவும்.

ஆழமாக மூச்சுவிடுவது முக்கியம்

  • மேலோட்டமாக மூச்சுவிடுவதால் இதயத்தின் பாரம் அதிகமாகும், கழுத்தும் தோளில் உள்ள தசைகளும் அதிக அளவில் பயன்படுத்தப்படும். அதனால் உடல் ரீதியான உளைச்சல் ஏற்படலாம்.

இயற்கையாக ஆழமாக மூச்சுவிடுவது எப்படி?

"வயிற்று" மூச்சுப் பயிற்சி

  • வயிற்றைப் பயன்படுத்தி மூச்சுவிடும் முறை :
  • முட்டுக்கால்களை மடித்து வைத்து மல்லாந்து படுக்கவும்.
  • ஒரு கையை நெஞ்சில் வைக்கவும்
  • மற்றொரு கையை வயிற்றுக்கு மேல், நெஞ்செலும்பின் கீழ் வைக்கவும்
  • மூக்குவழியே மெதுவாக மூச்சு இழுக்கவும்; உங்கள் நெஞ்செலும்புப் பகுதி பெரிதாவதை உங்கள் கை உணரும்
  • மூக்குவழியே மெதுவாக மூச்சு விடவும். உங்கள் வயிற்றுப்பகுதி மீண்டும் சாதாரண நிலையை அடைவதை நீங்கள் உணர்வீர்கள்
  • இதைப் பத்து முறை செய்யவும்
  • "நீட்சி" (Stretching) மூச்சுப் பயிற்சி
  • நேரே நிற்பதன் மூலம் ஒருவரால் தடையின்றி சரியாக மூச்சுவிட முடியும்.
  • கால்களை அடிக்கடி நன்றாக நீட்டவும்
  • முதுகுப் பகுதியை நேராக்கவும்
  • தோள்களை பின்னோக்கி செலுத்தவும்
  • உடலை நீட்சி அடையச் செய்வதன் மூலம் சரியாக மூச்சு விடலாம்

முக்கியக் குறிப்பு

மூச்சுவிடுவது மிக முக்கியமானது. சரியான வழியில் மூச்சுவிடும் போது பல்வேறு நோய்களைத் தவிர்க்கலாம். எனவே, எப்போதுமே சரியான வழிகளில் மூச்சுவிடுகிறோமா என்பதைக் கண்காணிப்பது அவசியம்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்