Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உடலில் போதிய சுண்ணாம்புச் சத்து இல்லாததற்கான அறிகுறிகள்

நீங்கள் உங்கள் உடலில் இந்த அறிகுறிகளைக் கவனித்திருக்கிறீர்களா?

வாசிப்புநேரம் -
உடலில் போதிய சுண்ணாம்புச் சத்து இல்லாததற்கான அறிகுறிகள்

(படம்: Pixabay)


1. சிறு விபத்துகளில் எலும்பு முறிவு ஏற்படுவது

எலும்புகள் அவற்றின் ஆக அதிக வலுவை 30 வயதுக்குள் அடைகின்றன. அதற்குப் பின் எலும்புகள் மெல்ல அவற்றிலுள்ள சுண்ணாம்புச்சத்தை இழக்கின்றன. அதனை நம்மால் மீண்டும் ஈடுகட்ட முடியாது.

அதனால் இரத்தத்தில் போதுமான சுண்ணாம்புச்சத்து இருக்க வேண்டும். இல்லை என்றால் உடல், எலும்புகளில் இருக்கும் சுண்ணாம்புச்சத்தைப் பயன்படுத்தும். இதனால் சிறு விபத்துகளிலும் எலும்பு முறிவுகள் ஏற்படலாம்.

2. உடலில் தசைப்பிடிப்பு ஏற்படுவது

என்றாவது ஒரு நாள் தசைப்பிடிப்பு ஏற்பட்டால் உடனே பதற வேண்டாம்.

ஆனால் அந்நிலை தொடர்ந்தால் அது உடலில் சுண்ணாம்புச்சத்து போதவில்லை என்பதைக் குறிக்கக்கூடும்.

சுண்ணாம்புச்சத்து தசை அசைவுகளுக்கு உதவும்.

இதனால், உடலில் நீண்ட காலமாக சுண்ணாம்புச்சத்துப் பற்றாக்குறை தொடர்ந்தால் அது தசைகளில் பிரச்சினையை விளைவிக்கும்.

3. உயர் இரத்த அழுத்தம்

உடலுக்குத் தேவையான அளவு சுண்ணாம்புச்சத்தை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைத் தவிர்க்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனால், நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவதற்குச் சுண்ணாம்புச்சத்துப் பற்றாக்குறையும் காரணமாகலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்