Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

Hotdog பன்களைச் சாப்பிடுவதில் கரடியை மிஞ்சுவர் மனிதர்கள் என்கிறது ஓர் ஆய்வு

10 நிமிடங்களில் எத்தனை ஹோட்டாக் பன்களை (hotdog buns) ஒருவரால் சாப்பிடமுடியும்?

வாசிப்புநேரம் -

10 நிமிடங்களில் எத்தனை ஹோட்டாக் பன்களை (hotdog buns) ஒருவரால் சாப்பிடமுடியும்?

ஒருவர் 83 பன்களைச் சாப்பிடமுடியும் என்று நிரூபித்திருக்கிறார்.

ஜோவி செஸ்ட்நட் என்ற அந்த அமெரிக்க ஆடவர் 13ஆவது முறையாகப் போட்டியில் வென்றிருக்கிறார்.

அவர் தமது சொந்த சாதனையை முறியடித்திருக்கிறார்.

பல ஆண்டு காலமாக ஹோட்டாக் பன்களைச் சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

கிருமிப்பரவல் காரணமாகப் போட்டி இந்த ஆண்டு மெய்நிகர்த் தொழில்நுட்பத்தின் வழி நடத்தப்பட்டது.

Nathan’s Famous Hot Dog Eating Contest எனப்படும் அந்தப் போட்டியில், ஜோவி 10 நிமிடங்களில் 75 ஹோட்டாக் பன்களைச் சாப்பிட்டிருக்கிறார்.

அவர் கிட்டதட்ட ஒரு நிமிடத்திற்கு 7.5 பன்களை உட்கொண்டார் என்ற அடிப்படையில் அது குறித்த ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

The New York Times செய்தி நிறுவனம் அது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

உலகில்,ஹோட்டாக் பன்களை அதி வேகத்தில் சாப்பிடக்கூடிய சிலர் கரடிகளை மிஞ்சிவிடுவார்கள் என்கிறது ஆய்வு.

ஒரு கரடியால், ஒரு நிமிடத்திற்கு 8 பன்களை உட்கொள்ளமுடியும்.

ஆனால், கரடியால் 6 நிமிடங்களுக்கு மேல் ஒரே வேகத்தில் சாப்பிடமுடியாது என்று ஆய்வு கூறுகிறது.

எனவே, மனிதர்கள் கரடிகளை மிஞ்சுகின்றனர் என்று நார்த் கரோலைனாவில் High Point பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கூறுகிறார்.

ஒரு நிகழ்வு நிபுணத்துவம் வாய்ந்த போட்டியாக மாறும்போது, மனிதர்களின் சாதனைகளும் காலப்போக்கில் மேம்படுகின்றன என்பதை அந்த ஆய்வு தெளிவுபடுத்துவதாக ஆய்வறிக்கை சொன்னது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்