Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

புற்றுநோயைத் தடுக்கும் காய்கறி, பழ வகைகள் யாவை?

புற்றுநோயைத் தடுப்பதற்கு பழங்கள், காய்கறிகள் வகைகளை உண்ணலாம். அதற்கேற்ற ஆரோக்கியமான பழ, காய்கறிகள் என்னென்ன?

வாசிப்புநேரம் -
புற்றுநோயைத் தடுக்கும் காய்கறி, பழ வகைகள் யாவை?

(படம்: Pixabay)

புற்றுநோயைத் தடுப்பதற்கு பழங்கள், காய்கறிகள் வகைகளை உண்ணலாம். அதற்கேற்ற ஆரோக்கியமான பழ, காய்கறிகள் என்னென்ன?

1) புரோக்கோலி

ஆரோக்கியம் நிறைந்த காய்கறி வகைகளில் புரோக்கொலியும் ஒன்றாகும். அதில் உள்ள சல்ஃபொரபேன் (sulforaphane) என்ற பொருள், புற்று உடல் முழுவதும் பரவுவதைத் தடுக்கிறது.

2) முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸை அரைத்துக் காய்கறி ரசமாகக் குடிக்கலாம். அல்லது மற்ற காய்கறிகளுடன் பச்சையாகவே உண்ணலாம்.
சில வகை புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உடலுக்குக் கிடைக்க உதவுகிறது முட்டைக்கோஸ்.

3) திராட்சைப் பழம்

சிவப்பு, ஊதா நிறத் திராட்சைப் பழங்களில் ரெஸ்வெரட்ரோல் (resveratrol) அதிக அளவில் உள்ளது. வீக்கத்தை குறைப்பதற்கான மூலப் பொருள்களைக் கொண்டவை திராட்சைகள். புற்றுநோய் வராமல் தடுக்க அவை உதவும்.

4) கேல் கீரை

வைட்டமின் 'ஏ', 'சி' ஆகியவற்றுடன் சுண்ணாம்புச் சத்துகளைக் கொண்டது கேல் கீரை. புற்றுநோய்த் தொற்று அபாயத்தை அது குறைக்கிறது.

5) பட்டாணி

ஃபைட்டோகெமிக்கல்ஸ் (phytochemicals) என்ற இரசாயனம் பட்டாணியில் உள்ளது. அது ஆரோக்கியம் நிறைந்தது. மலிவான விலையில் கிடைக்கம் பட்டாணியை உணவில் சேர்த்துக் கொண்டால் புற்று விலகிப் போகும் வாய்ப்பு உண்டு.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்