Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இரவில் வேலைசெய்யும் பெண்கள் புற்றுநோய்க்கு உள்ளாகும் அபாயம் அதிகம்

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வழக்கமாய் இரவில் வேலைசெய்யும் பெண்களுக்கு, பகலில் வேலை செய்யும் பெண்களைவிட புற்றுநோய்க்கு உள்ளாகும் அபாயம் 19 விழுக்காடு அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
இரவில் வேலைசெய்யும் பெண்கள் புற்றுநோய்க்கு உள்ளாகும் அபாயம் அதிகம்

படம்:AFP

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் வழக்கமாய் இரவில் வேலைசெய்யும் பெண்களுக்கு, பகலில் வேலை செய்யும் பெண்களைவிட புற்றுநோய்க்கு உள்ளாகும் அபாயம் 19 விழுக்காடு அதிகம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால் ஆஸ்திரேலியாவிலும் ஆசியாவிலும் இரவில் வேலைசெய்யும் பெண்களுக்கு அத்தகைய பாதிப்பு இல்லை என்று ஆய்வு காட்டியது.

மேற்கு சீனாவில் உள்ள மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த புற்றுநோய் நிபுணர் Ma Xuelei அந்த ஆய்வை மேற்கொண்டார்.

ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உள்ள பெண்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதற்கு அவர்களுக்குப் பாலியல் சுரப்பிகள் அதிகம் இருப்பது ஒரு காரணமாய் இருக்கலாம் என்று அவர் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்