Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கடும் உழைப்பு வேலையில் கைதூக்கிவிடுமா?

நியூயார்க்: அயராமல் உழைப்பது வேலையில் முன்னேற எந்த அளவுக்கு உதவுகிறது?

வாசிப்புநேரம் -
கடும் உழைப்பு வேலையில் கைதூக்கிவிடுமா?

(படம்: Unsplash/Tim Gouw)

நியூயார்க்: அயராமல் உழைப்பது வேலையில் முன்னேற எந்த அளவுக்கு உதவுகிறது?

நீண்டநேரம் வேலை செய்வதும் கடுமையாக உழைப்பதும் வேலையைப் பாதிக்கிறதே தவிர அதில் நன்மை அதிகமில்லை என்கிறது Financial Times வெளியிட்ட ஆய்வு முடிவொன்று.

சிக்காகோவைத் தளமாகக் கொண்ட பேஸ்கேம்ப் (Basecamp) செயலி நிறுவனத்தில் மொத்தம் 54 ஊழியர்கள் உள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் மே முதல் செப்டம்பர் வரை குறைவான வார நாட்களே வேலை செய்கின்றனர்.

நான்கு மணி நேரம். வாரத்துக்கு மொத்தம் 32 மணி நேரம் மட்டுமே வேலை.

மற்ற மாதங்களில் எப்போதும்போல் வாரத்துக்கு ஐந்து நாட்கள் வேலை செய்கின்றனர்.

'தேவையான வேலையைச் செய்ய நேரம் அதிகமாகவே இருக்கிறது. அதுதான் எங்களுக்குத் தேவை. ஊழியர்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்,' என்கிறார் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேஸன் ஃபிரைட்.

'50, 60, 70 மணிநேரம் வேலை செய்வது தேவையற்றது, அவ்வாறு வேலை செய்தால் நிர்வாகம் சரியில்லை என்று அர்த்தம்,' என்கிறார் அவர்.

நீண்ட நேரம் வேலையில் மூழ்கியிருப்பது மட்டும் ஊழியர்களின் உடல்நலத்துக்கும் மனநலத்துக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதல்ல.

வேலையில் அளவுக்கு அதிகமாகத் தீவிரம் காட்டுவதும் நல்லதல்ல என்று ஆய்வு கூறுகிறது.

உற்பத்தித் திறன் பாதிக்கப்படும். தரமும் குறைவதற்கான சாத்தியம் உள்ளது என்கிறது ஆய்வு.

ஊழியர்களின் வேலைப் பளுவைக் குறைக்கும் வகையில் கொள்கைகளை வகுக்கலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது.

36 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 52,000 ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.











 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்