Images
  • Charlie bit me
    காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Youtube / dairtv1

Youtube-இன் ஆகப் பிரபலமான காணொளிகளில் ஒன்றான "Charlie Bit My Finger"-760,000 டாலருக்கு விற்பனை

பிரிட்டனிலுள்ள குடும்பம் ஒன்று எடுத்த "Charlie Bit My Finger" என்ற காணொளி சுமார் 761,000 டாலருக்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

14 ஆண்டுகளுக்கு முன், 2007ஆம் ஆண்டில் அந்தக் காணொளி Youtube தளத்தில் வெளியிடப்பட்டது.

ஹாரி (Harry) என்ற அண்ணனுக்கும் அவனது குழந்தைத் தம்பியான சார்லிக்கும் (Charlie) இடையில் நடந்த வேடிக்கையான சம்பவத்தைச் சித்திரிக்கும் வகையில் காணொளி எடுக்கப்பட்டிருந்தது.

முதலில் அன்பான அண்ணனுடன் விளையாடும் சார்லி, பின் ஹாரியின் கைவிரலைக் கடித்துக்கொண்டு சிரிப்பதைக் காணொளி காட்டுகிறது.

காணொளி 883 மில்லியன் முறை பார்க்கப்பட்டது. Youtube தளத்தின் ஆகப் பிரபலமான காணொளிகளில் அதுவும் ஒன்று.

டேவிஸ்-கார் (Davies-Carr) குடும்பத்துக்குச் சொந்தமான அந்தக் காணொளி, விற்பனையான பின், விரைவில் Youtube தளத்திலிருந்து அகற்றப்படும் என்றும் கூறப்பட்டது.

ஏலத்தில் 11 கணக்குகள் அதனைப் பெற்றுக்கொள்ளப் போட்டியிட்டன. ஆனால் கடைசியில் 3fmusic என்ற கணக்கு அந்தக் காணொளியைப் பெற்றது.  

Top