Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

எது நல்ல முட்டை...? எந்த முட்டையைக் குப்பையில் போடவேண்டும்? கண்டறிய 5 சுலபமான வழிகள்

நம்மில் பலரும் சமைப்பதற்காக முட்டை ஒன்றைக் குளிர்ப்பதனப் பெட்டியிலிருந்து எடுக்கும்போது அதை எப்போது வாங்கினோம், கெட்டுப் போய்விட்டதா என்று குழப்பம் அடைந்திருப்போம்.

வாசிப்புநேரம் -
எது நல்ல முட்டை...? எந்த முட்டையைக் குப்பையில் போடவேண்டும்? கண்டறிய 5 சுலபமான வழிகள்

(படம்: Pixabay)

நம்மில் பலரும் சமைப்பதற்காக முட்டை ஒன்றைக் குளிர்ப்பதனப் பெட்டியிலிருந்து எடுக்கும்போது அதை எப்போது வாங்கினோம், கெட்டுப் போய்விட்டதா என்று குழப்பம் அடைந்திருப்போம்.

  • காலாவதியான முட்டையா?

முட்டைப் பெட்டியில் குறிப்பிட்டுள்ள தேதியைப் பார்த்துக் கண்டுபிடிக்கலாம். சில நாடுகளிலிருந்து வரும் முட்டைகளின் மேல் காலாவதித் தேதி குறிக்கப்பட்டிருக்கும்.

தேதியைக் கடந்துவிட்டால் அதை உடனே வீசவேண்டும் என்பதில்லை! முட்டைகள் சிலநாள் கழித்தே வீணாகும்.

எனவே கீழ்க்காணும் மற்ற வழிகளைக் கொண்டு அதைச் சாப்பிடலாமா என நிர்ணயிக்கலாம்!

  • நுகர்ந்து பாருங்கள்

அழுகிப்போன முட்டைகளிலிருந்து வாடை ஒன்று வெளியாகும். அதிலிருந்தே கண்டுபிடிக்கலாம் - வாடையிருந்தால் முட்டையைச் சாப்பிடாதீர்கள்!

  • கண்ணால் பாருங்கள்

முட்டையை உங்கள் கைகளில் பிடித்து, அதன் ஓட்டைச் சற்று கவனிக்கவும்.

ஓட்டின் நிறம் மாறியுள்ளதா?

அதில் சிறு விரிசல்கள் ஏற்பட்டுள்ளனவா?

பிசுபிசுப்பாக இருக்கிறதா?

ஓட்டைத் தொடும்போது மாவு போல் தோன்றுகிறதா?

அப்படியானால் முட்டைக்குள் கிருமி புகுந்துவிட்டது; அது வீணாகிவிட்டது! குப்பையில் போடுங்கள்!

  • தண்ணீரில் முட்டை மிதக்கிறதா?

இந்தச் சோதனையின் மூலம் நீங்கள் முட்டை பழையதா புதியதா எனக் கண்டுபிடிக்கலாம். குவளை நிறையத் தண்ணீரை நிரப்பி அதில் முட்டையை வைக்கவேண்டும்.

முட்டை மேல்நோக்கி எழுந்தால் அல்லது மிதந்தால் அது பழையதாகிவிட்டது என அர்த்தம். நாள் போகப்போக அதனுள் காற்று அதிகரிக்கும். முட்டைக்குள் காற்று புகுந்தால் அது தண்ணீரில் மிதக்கத் தொடங்கும்.

இருப்பினும் இந்த வழிமுறை முட்டை வீணாகிவிட்டதா எனக் காட்டாது; அது பழையதென மட்டுமே காட்டும்.

  • மெழுகுவர்த்திச் சோதனை

இருட்டறையில் மெழுகுவர்த்தியைப் பற்றவைக்கவும். அல்லது நீங்கள் மின்கல விளக்கையும் பயன்படுத்தலாம்.

முட்டையின் பெரிய ஓரத்தில் விளக்கைக் காட்டுங்கள் பின், அதைத் விரைவாக இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் திருப்புங்கள். அவ்வாறு சரியாகச் செய்தீர்களானால், ஓட்டினுள் இருக்கும் முட்டையைக் காணமுடியும்.

முட்டை நிலையாக இருந்தால் அதை சமைத்து உண்ணலாம்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்