Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

முந்திய தலைமுறையை ஈர்த்த "Chicken Soup For The Soul" நூல் தொகுப்பு இப்போது குழந்தைகளுக்காக வெளியிடப்படவுள்ளது

மில்லியன் கணக்கில் விற்பனையாகும் "Chicken Soup For The Soul" எனும் நூல் தொகுப்பை வெளியிடும் நிறுவனம், முதல்முறையாகப் பச்சிளம் குழந்தைகளையும் இளம் வயதினரையும் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -

மில்லியன் கணக்கில் விற்பனையாகும் "Chicken Soup For The Soul" எனும் நூல் தொகுப்பை வெளியிடும் நிறுவனம், முதல்முறையாகப் பச்சிளம் குழந்தைகளையும் இளம் வயதினரையும் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

"Chicken Soup For The Soul Babies" எனும் புதிய தொகுப்பு, மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்காக வெளியிடப்படவுள்ளது.

"Chicken Soup For The Soul Kids" எனும் தொகுப்பு, நான்கில் இருந்து 7 வயது வரையிலான பிள்ளைகளுக்காக வெளியீடு காணவுள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்ற புத்தகங்களை வெளியிடும் பதிப்பு நிறுவனம் Charlesbridge-உடன் உடன்பாடு செய்துகொண்டுள்ளதாக, Chicken Soup For The Soulஇல் பதிப்பாளரும் தலைமை ஆசிரியருமான Amy Newmark அறிவித்தார்.

செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நான்கு புத்தகங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • The board books Everyone Shares (Except Cat)
  • Everyone Says Please (Except Cat)

படங்களுடன்கூடிய கதை நூல்கள்

  • The Sunshine Squad: Discovering What Makes You Special
  • Sophie And The Tiny Dognapping: A Book About Doing The Right Thing.

தாத்தா பாட்டிகளும் பெற்றோரும் குட்டிக் குழந்தைகளோடு வாழ்க்கைக் கதைகளை மகிழ்ச்சியாகவும் கேளிக்கையாகவும் பகிர்ந்துகொள்ளும் அனுபவத்தை, புதிய புத்தகங்கள் வழங்கும் என்று Amy Newmark சொன்னார்.

வாழ்நாள் வாசிப்பாளர்களை உருவாக்க வேண்டும் என்பது, பதிப்பாளர்களின் இலக்குகளில் ஒன்று.

இன்றைய பெற்றோர் பலர் படித்துவளர்ந்த பிரபலப் புத்தகத் தொகுப்பை, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்வதும் முக்கியம் என்று பதிப்பாளர்கள் கூறினர்.

- AP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்