Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

உங்கள் பிள்ளைகள் சாப்பிடுவது சரியான உணவா? கவனியுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்

பிள்ளைகள் என்ன உட்கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்; அது அவர்களது எதிர்கால ஆரோக்கியத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வாசிப்புநேரம் -

பிரியங்கா

7 வயதில் பருமனான உடல்வாகு கொண்டிருக்கும் பிள்ளைகளில் பத்தில் ஏழு பேர், பெரியவர்களான பின்னரும் உடற்பருமனால் பாதிக்கப்படுகின்றனர். தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம் நேற்று வெளியிட்ட அறிக்கை அதனைக் குறிப்பிட்டது.

அதுமட்டுமல்லாமல் தற்போது 5 வயதிலுள்ள சுமார் 10 விழுக்காட்டுப் பிள்ளைகளுக்கு உடற்பருமன் பிரச்சினை உள்ளது.

பிள்ளைகளின் உணவுப் பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைக் குழுமம் சுட்டியது.

இதன் தொடர்பில் 'செய்தி' சில நிபுணர்களிடம் பேசியது.

குழந்தை மருத்துவர் திரு க. வெள்ளையப்பன், ஊட்டச்சத்து நிபுணர் மீனு அகர்வால் ஆகியோருடன் பேசியது.


குழந்தை மருத்துவர் திரு க. வெள்ளையப்பன்


இன்றைய காலக்கட்டத்தில் பிள்ளைகள் நொறுக்குத் தீனி, இனிப்புத் தின்பண்டங்கள், இனிப்புப் பானங்கள் ஆகியவற்றை அதிகம் விரும்பி உட்கொள்கிறார்கள். அதனால் அவர்கள் உட்கொள்ளும் கலோரிகளும் அதிகமாகிறது. அவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிள்ளைகள் அவற்றைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவேண்டும். அவர்கள் வெளியே சென்று சுறுசுறுப்பான விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும்.


ஊட்டச்சத்து நிபுணர் மீனு அகர்வால்


பெற்றோர் தம் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலிருந்தே பொட்டலமிட்ட உணவுகளில் எழுதப்பட்டிருக்கும் உணவு குறித்த தகவலைப் படிக்கச் சொல்லிக் கொடுக்கவேண்டும். பிள்ளைகளுக்குத் தாங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானது தானா என்பது தெரிந்திருக்கவேண்டும்.


பிள்ளைகள் என்ன உட்கொள்கிறார்கள் என்பது மிகவும் முக்கியம்; அது அவர்களது எதிர்கால ஆரோக்கியத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்