Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சீனப் புத்தாண்டின்போது என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

சீனப் புத்தாண்டின்போது என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?

வாசிப்புநேரம் -

சீனப் புத்தாண்டின்போது, எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதற்குச் சில நம்பிக்கைகள் உள்ளன.

அதைப் பொறுத்து நன்மை, தீமைகள் நடக்கும் என்று சீனர்கள் பொதுவாக நம்புகின்றனர்.

அவற்றில் ஒரு சில..

புத்தாண்டில் அதிர்ஷ்டம் கிடைக்க என்ன செய்யலாம்?

- அங் பாவ் (ang pao) காசு 2,4,6,8 எனும் இரட்டைப்படை எண்களில் (even digits) கொடுக்கவேண்டும். ஒற்றைப்படையில் கொடுப்பது நல்லதல்ல.

- சீன நண்பர்களுக்கு 2 மாண்டரின் (Mandarin) ஆரஞ்சுப் பழங்களை சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கக் கொடுக்கலாம். 

ஒற்றைப்படை எண்ணிக்கையில் பழத்தைக் கொடுக்க வேண்டாம்.

ஜோடியாகக் கொடுப்பதுதான் நல்லது, அதிர்ஷ்டமானது என்பது சீனர்களின் நம்பிக்கை.

- Yusheng எனும் மீன் காய்கறி உணவைச் சாப்பிடுவது சீனப் பாரம்பரியங்களில் பிரபலமானது. அதை மேலே தூக்கிப் போட்டால், அதிர்ஷ்டம் கிட்டும் என்பது அவர்களின் நம்பிக்கை.

எவ்வளவு உயரமாக Yusheng மேலே தூக்கிவிடப்படுகிறதோ, அதற்கேற்ப நன்மையும் அதிர்ஷ்டமும் கிட்டும் என்று கூறப்படுகிறது. 

செய்யக்கூடாதவை:

- சீனப் புத்தாண்டின் முதல் நாள் அன்று, வீட்டைக் கூட்டக்கூடாது, முடி கழுவக்கூடது என்று சில சீனர்கள் நம்புகின்றனர்.

அப்படிச் செய்தால், இருக்கும் அதிர்ஷ்டத்தை வீட்டைவிட்டு வெளியேற்றுவதுபோல் ஆகிவிடுமாம்.

சீனப் புத்தாண்டிற்கு முன்னதாகவே வீட்டைச் சுத்தம் செய்திருக்கவேண்டும்.

- இறப்பு, அமங்கலமான செய்தி்களைப் பற்றிப் புத்தாண்டின்போது பேசக்கூடாது.

- புத்தாண்டுக் காலத்தில் கடன் வாங்கக்கூடாது என்று சிலர் நம்புகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்