Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சீனர்கள் ஒவ்வோர் ஆண்டிற்கும் விலங்குகளின் பெயரைச் சூட்டுவது ஏன்?

சீனர்கள் ஒவ்வோர் ஆண்டிற்கும் விலங்குகளின் பெயரைச் சூட்டுகின்றனர். வரும் சீனப்புத்தாண்டு எருது ஆண்டு.

வாசிப்புநேரம் -
சீனர்கள் ஒவ்வோர் ஆண்டிற்கும் விலங்குகளின் பெயரைச் சூட்டுவது ஏன்?

(படம்: Pixabay)

சீனர்கள் ஒவ்வோர் ஆண்டிற்கும் விலங்குகளின் பெயரைச் சூட்டுகின்றனர். வரும் சீனப்புத்தாண்டு எருது ஆண்டு.

ஆனால், அந்த விலங்குகள் வரிசைப்படுத்தப்படுவதில் உள்ள காரணம் உங்களுக்குத் தெரியுமா?

முன்பொரு காலத்தில்...

சீனாவின் ஜேட் மன்னர் விலங்குகளைக் கொண்டு நாள்காட்டியை உருவாக்க விரும்பினார்.

விலங்குகளைத் தேர்ந்தெடுக்க அவர் ஓர் ஓட்டப்பந்தயத்தை ஏற்பாடு செய்தார். அதில் முதல் 12 இடங்களில் வரும் விலங்குகளுக்கு நாள்காட்டியில் இடம்பெறும் வாய்ப்பை அளிப்பதாகவும் சொன்னார்.

ஓட்டப்பந்தயமும் தொடங்கியது... அதில் எலி கலந்துகொண்டது. அதிவேகத்தில் ஓட முடியாத எலி, திட்டம் ஒன்றைத் தீட்டியது.

போட்டியின்போது, ஆக வேகமாக ஓடக்கூடிய விலங்கான எருதின் முதுகில் அமர அது அனுமதி கேட்டது. எலி பாட்டுப் பாடினால் மட்டுமே தனது முதுகில் அமர அதற்கு அனுமதி என்று எருது நிபந்தனை விதித்தது. அதற்குச் சம்மதித்த எலியும் எருதின் முதுகில் அமர்ந்தது! எருது அதைத் தூக்கிக்கொண்டு பந்தயத்தில் ஓடியது.

போட்டியின் இறுதிக் கட்டத்தில், எலி எருதின் முன்னால் பாய்ந்து சென்று முதல் இடத்தைப் பெற்றது!

போட்டியின் 12 வெற்றியாளர்கள் :

1. எலி
2. எருது
3. புலி
4. முயல்
5. கடல்நாகம்
6. பாம்பு
7. குதிரை
8. ஆடு
9. குரங்கு
10. சேவல்
11. நாய்
12. பன்றி
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்