Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களை உருவாக்கக் கற்பிக்கும் பிள்ளைகளுக்கான பயிலரங்கு

கிறிஸ்துமஸுக்கான  அலங்காரங்களைச் சிலர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்குகின்றனர். 

வாசிப்புநேரம் -

கிறிஸ்துமஸுக்கான அலங்காரங்களைச் சிலர் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் உருவாக்குகின்றனர்.

பிள்ளைகளுக்கும் அதன் முக்கியத்துவத்தைப் புரியவைக்கப் பயிலரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது 'பத்மே ஹம் பள்ளி'.

ஒரு காலத்தில் பானைகள், அகல் விளக்குகள், குடுவைகள் போன்ற வீட்டுக்குத் தேவையான பல பொருள்கள் களிமண்ணைக் கொண்டு செய்யப்பட்டன.

ஆனால், இன்றோ நிலைமை வேறு.

இதனை மாற்ற விரும்புகிறது இந்தப் பள்ளி.

கொண்டாட்டங்கள், பண்டிகைகளின்போது அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க முக்கியப் பொருள்களைக் களிமண்ணைக் கொண்டு வடிவமைக்கின்றனர் இவர்கள்.


கவிதா, பயிற்றுவிப்பாளர்

தீபாவளியின்போது, அகல் விளக்குகள் செய்தோம்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கவிடும் அலங்காரப் பொருள்களைச் செய்தோம்.

களிமண்ணால் முழு கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்கியவர்களும் உள்ளனர்.

கிறிஸ்துமஸுக்கே உரிய விளக்குகள், மணிகள், குவளைகள் ஆகியனவற்றைக் கைப்பட உருவாக்கியதில் அளவில்லா மகிழ்ச்சி பிள்ளைகளுக்கு. 


திவ்யா, பங்கேற்பாளர்

அதில் கிறிஸ்துமஸ் பலகாரங்களை வைத்து நான் சாப்பிடுவேன்.

அலங்காரமாகவும் வைப்பேன்.

அந்த வகுப்பு மிக நன்றாக இருந்தது. 


விக்ரம், பங்கேற்பாளர்

படம்: Sharaladevi

அதை நான் வீட்டுக்கு எடுத்துச் சென்று நண்பர்களிடம் காட்டப்போகிறேன்.

எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.

கிருமிப்பரவல் சூழல், பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்தும் நேரத்தை வெகுவாக அதிகரித்துள்ளது.

அதிலிருந்து, இந்த வகுப்பு தற்காலிக விடுதலை அளித்துள்ளது என்றனர் பெற்றோர்.


அகிலா, தாயார்

அதனால், தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

3-4 மணி நேரம் எவ்வித இடையூறும் இன்றி இதில் தங்கள் கைவண்ணத்தைக் காட்டுவது பிள்ளைகளுக்கு மிக நல்லது என்று நான் நினைக்கிறேன்.

களிமண்ணைப் பிசைவது, ஒவ்வொரு கட்டத்திலும் அதற்குத் தேவையான தண்ணீர் விடுவது, ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் அதை உருவாக்குவது என்று கண்ணும் கையும் ஒருசேர இயங்குவது இதில் அவசியம்.

ஒரு வகையில் இது கண், கை, மனத்திற்கு நல்ல பயிற்சி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்