Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கிறிஸ்துமஸ் வாழ்த்துகளுக்கு 'Merry' எனும் சொல்லைப் பயன்படுத்துவது ஏன்?

கிறிஸ்துமஸ் நெருங்கிவரும் வேளையில் 'Merry Christmas' எனும் வாழ்த்தை நாம் அனைவரும் அடிக்கடி கேட்பது, சொல்வது வழக்கம்.

வாசிப்புநேரம் -

கிறிஸ்துமஸ் நெருங்கிவரும் வேளையில் 'Merry Christmas' எனும் வாழ்த்தை நாம் அனைவரும் அடிக்கடி கேட்பது, சொல்வது வழக்கம்.

விழாக்காலங்களின்போது வாழ்த்துக் கூறுவதற்குப் பொதுவாக ஆங்கிலத்தில் 'Happy' என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.

அது பண்டிகை இனிமையாக அமையவேண்டும் என்பதற்காகக் கூறப்படுவது.

இருப்பினும், கிறிஸ்துமஸ் என்று வரும்போது மட்டும், வாழ்த்துகளுக்கு 'Merry' என்ற அடைமொழி பயன்படுத்தப்படுகிறது.

ஏன் அப்படி?

தொடக்கத்தில், வாழ்த்துகள் கூற, இரு சொற்களுமே பயன்படுத்தப்பட்டன.

இருப்பினும் 18-ஆம் நூற்றாண்டில், சார்ல்ஸ் டிக்கன்ஸ், a Christmas Carol எனும் கதைப்புத்தகத்தில் 'Merry'-ஐப் பயன்படுத்திய பின், அது உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கிறிஸ்துமஸுக்கு 'Merry christmas' என்று வாழ்த்துக் கூறுவது பிரபலமானது.

'Merry' என்ற சொல்லும் 'happy' என்ற வார்த்தையும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளன.

'happy' என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள்.

'Merry' என்ற வார்த்தை, உற்சாகத்தோடு குதூகலமாக இருப்பதைக் குறிக்கிறது.

பண்டிகையின்போது, உற்றார் உறவினர்களிடையே அன்பளிப்புகள் பரிமாறிக்கொள்ளப்படுவதால், 'Merry' எனும் சொல் பொருத்தமானதாகக் கருதப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்