Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தூசு படிந்த அழுக்கு மடிக்கணினியை சுத்தம் செய்வது எப்படி?

சுத்தமாக வைத்துக்கொண்டால் 3 ஆண்டு பழைய மடிக்கணினியும் புதுப் பொலிவுடன் மினுமினுக்கும்.

வாசிப்புநேரம் -
தூசு படிந்த அழுக்கு மடிக்கணினியை சுத்தம் செய்வது எப்படி?

(படம்: AFP)

நம்மில் பலர் மடிக்கணினியை தினசரி பயன்படுத்துவதுண்டு.

சுத்தமாக வைத்துக்கொண்டால் 3 ஆண்டு பழைய மடிக்கணினியும் புதுப் பொலிவுடன் மினுமினுக்கும்.

அதை எவ்வாறு சுத்தம் செய்வது? இதோ சில குறிப்புகள்...

1) மடிக்கணினியைச் சுத்தப்படுத்த சிறிதளவு மது, நுண்ணிழைத் துணி, பஞ்சுக் குச்சி, Air Duster எனப்படும் காற்று ஊதி ஆகியவை தேவை.
துடைப்பதற்கு மது பொருத்தமானது. விலையுயர்ந்த ஏனைய சுத்திகரிக்கும் திரவத்துக்கு அவசியமில்லை.

2) மடிக்கணினியை அணைத்துவிட்டு, அதில் இருக்கும் மின்கலத்தை முடிந்தால் எடுக்கலாம். மடிக்கணினியை உள்ளே சுத்தம் செய்வது முக்கியம். விசைப்பலகையின் மேலே இருக்கும் அழுக்கை மட்டும் சுத்தம் செய்தால் போதாது.

வெளியில் இருக்கும் உறைகளை எடுத்து, முதலில் காற்று ஊதியைப் பயன்படுத்தி கணினிக்குள் இருக்கும் தூசியை நீக்கலாம்.

இதன்மூலம், துளைகளின் மூலம் கணினிக்குள் மறைந்து சிக்கியிருக்கும் தூசி, முடி, உணவுத் துணுக்குகள் ஆகியவற்றை வெளியேற்றலாம்.

3) பிறகு, மடிக்கணினியின் வெளிப்புறத்தை சுத்தம் செய்யவேண்டும். நுண்ணிழைத் துணியில் சிறிதளவு மதுவைத் தெளித்து, அதைக் கொண்டு விசைப்பலகை உள்ளிட்ட இடங்களைத் துடைக்கவேண்டும்.

சுத்தம் செய்யும் திரவமோ மதுவோ நேரடியாகக் கணினியின் மீது படக்கூடாது.

துணியின் மீது திரவத்தையோ மதுவையோ தெளித்து அதைக் கொண்டு மடிக்கணினியைத் துடைக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்