Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சீனப் புத்தாண்டு சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

சீனப் புத்தாண்டு தினத்தின் போது பல மரபுகளும் பாரம்பரியங்களும் பின்பற்றப்படும்.

வாசிப்புநேரம் -
சீனப் புத்தாண்டு சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

(படம்: Pixabay)


சீனப் புத்தாண்டு தினத்தின் போது பல மரபுகளும் பாரம்பரியங்களும் பின்பற்றப்படும்.

புத்தாண்டு நன்றாக அமைய சில செயல்களைச் செய்வதும் சிலவற்றைத் தவிர்பதுவும் சீனப் பாரம்பரியத்தில் பின்பற்றப்பட்டுவருகிறது.

அவற்றில் சில இதோ...

1. வீட்டைச் சுத்தம் செய்தல்:

சீனப்புத்தாண்டு தினத்தன்று வீட்டைச் சுத்தம் செய்யக்கூடாது.

புத்தாண்டு தினத்திற்கு முன்பாகவே அலுவலகம், வீடுகளில் உள்ள குப்பைகளை அகற்றுவது நல்லது.

அப்படிச் செய்வதன் மூலம் தீய எண்ணங்கள் நம்மை விட்டுவிலகுவதாக நம்பப்படுகிறது.

2. 'Yee Sang' உணவு:

'Yee Sang' உணவு மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மிகவும் பிரபலம். அதுவும் புத்தாண்டின்போது மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

'Yee Sang' அதிர்ஷ்டம், இன்பம், சுபத்தைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.


3. Pomel பழம்:

சீனப் புத்தாண்டின் போது Yee Sang' உணவு போல் Pomel பழமும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படும்.

Pomel பழம் செல்வத்தைக் குறிக்கும். வெற்றிமேல் வெற்றி பெறவும், குடும்பம் ஒற்றுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கப் பரிமாறப்படும்.

உணவருந்தும்போது சில பழங்களும் பரிமாறப்படும், ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு வாழ்த்துகளைக் குறிக்கும்.

4. சிவப்பு நிறத்தில் அலங்காரம்:

சீனப் புத்தாண்டின்போது வீடுகளைச் சிவப்பு நிறத்தில் அலங்காரம் செய்வது வழக்கம்.

சிவப்பு நிறப் பழங்களும் பூக்களும் இருக்கும், அவை அதிர்ஷ்டத்தை வரேவேற்பதாக நம்பப்படுகிறது.

அதனால்தான் அன்பளிப்புகள்கூட சிவப்பு நிறத்திலான அட்டைகளில் வைத்துக் கொடுக்கப்படும்.

5. குடும்பத்துடன் சேர்ந்து உணவு உட்கொள்வது:

குடும்பத்தினருடன் சேர்ந்து உணவு சாப்பிடுவது மிக முக்கியமான ஒன்று.

பழைய கசப்பான சம்பவங்களை மறந்து புதிய சூழலை அமைக்கவும், சிரிப்புச் சத்தம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுகூடுவர்.

இறால் சாப்பிட்டல் மகிழ்ச்சி, மீன் சாப்பிட்டால் செல்வம், அரிசிப் பலகாரம் சாப்பிட்டால் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் போன்ற நம்பிக்கைகள் சீனப் பாரம்பரியத்தில் உண்டு.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்