Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

விற்கமுடியாத பொருள்களை அழிக்கப் போவதாகக்கூறிய Coach மன்னிப்புக் கேட்டது

விற்கமுடியாத பொருள்களை அழிக்கப் போவதாகக்கூறிய Coach மன்னிப்புக் கேட்டது

வாசிப்புநேரம் -
விற்கமுடியாத பொருள்களை அழிக்கப் போவதாகக்கூறிய Coach மன்னிப்புக் கேட்டது

REUTERS/Carlo Allegri

ஆடம்பரப் பொருள்களை விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனமான Coach இனி அதன் கடைகளுக்குத் திரும்பும் சேதமடைந்த அல்லது விற்பனை செய்ய முடியாத பொருள்களை அழிக்கப்போவதில்லை என்று உறுதியளித்துள்ளது.

அந்தச் சம்பவம் ஒரு பிரபலமான TikTok காணொளியால் நடந்தது.

TikTok சீற்றத்தைத் தொடர்ந்து ஆடம்பர நிறுவனம் தேவையற்ற பொருள்களை அழிப்பதை நிறுத்துகிறது.

Coach நிறுவனம் வரி நோக்கத்திற்காகத் தேவையற்ற பொருள்களை வேண்டுமென்றே குறைத்தது என்று அதன்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதனால் நிறுவனம் மக்களிடம் மன்னிப்புக் கோரியது.

நிறுவனம் குற்றச்சாட்டுகளை நேரடியாக குறிப்பிடாமல் செவ்வாய்க்கிழமையன்று Instagram பக்கத்தில் எழுதியது.

குறிப்பாக, சேதமடைந்த பொருள்களைப் பொறுப்புடன் மறுபயனீடு செய்யப்போவதாகக் கூறியது.

TikTokல் அன்னா சாக்ஸ் என்பவர் செயலியில் ஒரு காணொளியை வெளியிட்டார். அதில் அவர் Coach பொருள்களைப் பிரித்துப் பார்த்தார்.

அப்போது, அவர் பெட்டியில் சேதமடைந்த பொருளைப் படம்பிடித்துக் காணொளியாக வெளியிட்டார்.

அந்தக் காணொளி 560,000 தடவைகள் "லைக்" செய்யப்பட்டுள்ளது.

அதோடு, டயட் பிராடா (Diet Prada) என்பவர் Coach பொருள்கள் ஒரு குப்பைத்தொட்டியிலிருந்து மீட்கப்படுவதைக் காட்டும் காணொளியை வெளியிட்டது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்