Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

மதுபானத்தின் பக்கம் திரும்பியுள்ள கொக்க-கோலா

கொக்க-கோலா நிறுவனம் முதல்முறையாக அதன் முதல் மதுபானத்தை அறிமுகம் செய்யவுள்ளது. அதன் தொடர்பில் ஜப்பானில் பல்வேறு பானங்களைக் கொண்டு ஆய்வு செய்யவுள்ளது அந்நிறுவனம்.

வாசிப்புநேரம் -
மதுபானத்தின் பக்கம் திரும்பியுள்ள கொக்க-கோலா

கோப்புப் படம்: REUTERS/Stefan Wermuth

தோக்கியோ: கொக்க-கோலா நிறுவனம் முதல்முறையாக அதன் முதல் மதுபானத்தை அறிமுகம் செய்யவுள்ளது. அதன் தொடர்பில் ஜப்பானில் பல்வேறு பானங்களைக் கொண்டு ஆய்வு செய்யவுள்ளது அந்நிறுவனம்.

அங்கு மதுபானத்திற்குத் தேவை அதிகமாக உள்ளது. சுவைபானங்களின் விற்பனை சரிந்துவிட்டதால் மதுபானத்தின் பக்கம் திரும்பியுள்ளது கொக்க-கோலா நிறுவனம்.

ஜப்பானில் மட்டுமே மதுபானம் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

உலகெங்கும் உள்ள மக்கள் கொக்க-கோலா நிறுவனம் இப்படியொரு மதுபானத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள் என்று நினைப்பதாக கொக்க-கோலாவின் ஜப்பான் வர்த்தகப் பிரிவின் தலைவர் கூறினார்.

ஜப்பானில் உற்பத்தியாகும் பெரும்பாலான பொருட்கள் அங்கேயே தங்கிவிடுவதையும் அவர் சுட்டினார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்