Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

அழியும் நிலையில் எத்தியோப்பிய காப்பி தயாரிப்பு

பல்லாண்டுகளாகக் காப்பி தயாரிப்பில் சிறந்து விளங்கிய எத்தியோப்பியா தற்போது ஒரு புது சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அழியும் நிலையில் எத்தியோப்பிய காப்பி தயாரிப்பு

(படம்: Pixabay)

பல்லாண்டுகளாகக் காப்பி தயாரிப்பில் சிறந்து விளங்கிய எத்தியோப்பியா தற்போது ஒரு புது சிக்கலில் சிக்கிக்கொண்டுள்ளது.

அதற்கு முக்கியக் காரணம் கட் (khat) தாவரம் அங்கு அதிகமாகப் பயிரிடப்படுவதே.

2000ஆம் ஆண்டு வரைதான் எத்தியோப்பியாவில் காப்பி அதிகமாகத் தயாரிக்கப்பட்டது. அதன்பின் அதிக வருமானம் ஈட்டித் தரும் கட் தாவரத்திற்கு மக்கள் மாறினார்கள்.

மாற்றத்திற்குக் காரணம், காப்பி விளைச்சலுக்கு ஆகும் காலமும், குறைவான லாபமும்தான்.

ஒரு கிலோ காப்பித் தூள் 2 டாலருக்குதான் விலைபோகும். ஆனால் கட் ஒரு கைப்பிடி அளவே 4 டாலர் வரை விலைபோகும்.

பின் கட் தாவரத்தை வளர்க்க அதிக நீர் தேவையில்லை என்பதாலும், எத்தியோப்பியாவைச் சுற்றியுள்ள நகர்களில் கட் தாவரத்தின் தேவை அதிகமானதால் அது மேலும் அதிகமான மக்களைக் காப்பித் தயாரிப்பிலிருந்து தள்ளிவைக்கிறது.

இந்த மாற்றத்தால் காப்பி ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்