Images
  • Cold Rain
    (படம்: Pixabay) 

குளிர் அதிகமாக இருக்கும்போது உடலில் ஏற்படும் மாற்றங்கள்


1. உடலில் அதிக கலோரிகள் கரைவது

உடற்பயிற்சி ஏதும் செய்யாமலே, நம் உடல் தினமும் இயங்க, குறிப்பிட்ட அளவு கலோரிகள் தேவைப்படுகின்றன.

இது உங்களது அடிப்படை 'metabolic' விகிதம்.

குளிரான இடங்களில், உடல் வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்ள உடல் கூடுதலாக உழைக்க வேண்டும்.

இதனால் உங்கள் அடிப்படை 'metabolic' விகிதம் அதிகரித்து கூடுதல் கலோரிகள் கரைகின்றன.



2. விரல்கள் சுருங்குவதைப் போல் உணர்வது

குளிராக இருக்கும்போது உடல் வெப்பத்தை ஒரே நிலையில் வைத்துக்கொள்ள இரத்தக்குழாய்கள் சுருங்குகின்றன.

இதனால் விரல், கால் போன்று உடலின் நுனியில் உள்ள பாகங்களில் இரத்தவோட்டம் குறைவாக இருக்கும்.

இதன் காரணமாக அவை 'சுருங்குவதாகத்' தோன்றுகிறது.

3. மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் அதிகரிப்பது

இது பெரும்பாலும் இருதய நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களிடையே தான் நடக்கும்.

உடல், வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்ள கூடுதலாக உழைக்க வேண்டும். இதனால் இருதயத்தின் மீது இருக்கும் அழுத்தம் அதிகரிப்பதால் இரத்த அழுத்தமும் கொஞ்சம் அதிகரிக்கும்.


 

Top