Images
  • pink

உலகின் ஆகப் பழமையான நிறம் எதுவென்று தெரியுமா?

உலக உயிரினங்களிடையே ஆகப் பழமையான வண்ணம் என்ன என்று தெரியுமா?

'Biological colours' எனப்படுவது உயிரினங்களிடேயே இயற்கையாக ஏற்படும் நிறம்.

உதாரணத்திற்கு இலைகளிலுள்ள chlorophyll பசை அவற்றுக்கு இயற்கையாகவே பச்சை நிறத்தை அளிக்கின்றன.

இத்தகைய 'Biological colours' நிறங்களில் ஆகப் பழமையானதை அமெரிக்க, ஜப்பானிய ஆய்வாளர்கள் சஹாரா பாலைவனத்திலிருந்த பழைய பாறைகளின் அடியிலுள்ள அணுக்களின் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

1.1 பில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த நிறம் அழுத்தமான இளஞ்சிவப்பு!

சில வடிவங்களில் அந்த அணுக்கள் இரத்தச் சிவப்பிலும் ஊதாவிலும் காணப்படலாம்.

ஆனால் சூரிய வெளிச்சத்தில் அவை அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படுகின்றன.

இவ்வளவு பழமையான நிற அணுக்களைக் கொண்ட பொருள் ஒன்று இவ்வளவு காலம் நீடித்திருப்பதைக் கண்டு ஆய்வாளர்கள் வியந்துள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் டௌடின்னி வட்டாரத்தில் இந்தப் பழமைவாய்ந்த பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அவற்றை அரைத்துத் தூளாக்கி நிற அணுக்கள் சேகரிக்கப்பட்டன.  

Top