Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

இந்தப் பொருள்கள் ஏன் இந்த நிறத்தில்?

பச்சை, மஞ்சள், நீலம், பழுப்பு என வண்ணங்கள் ஏராளம்.

வாசிப்புநேரம் -
இந்தப் பொருள்கள் ஏன் இந்த நிறத்தில்?

படங்கள்: Pixabay

பச்சை, மஞ்சள், நீலம், பழுப்பு என வண்ணங்கள் ஏராளம்.

அதேபோல அவற்றுடன் நாம் தொடர்புபடுத்தும் சின்னங்களும் ஏராளம்.

சில பொருள்கள் பெரும்பாலும் சில வண்ணங்களிலேயே இடம்பெறுகின்றன.

உதாரணத்திற்கு வாகனத்தை நிறுத்தும்படிக் குறிப்பிடும் பலகைகளும் அபாய எச்சரிக்கைகளும் எப்போதும் சிவப்பு நிறத்தில் இருக்கின்றன.

இத்தகைய பொருள்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட வண்ணங்களில் இடம்பெறுவது ஏன்?

1. நுழைவாயிலைக் குறிக்கும் பலகைகளுக்குப் பச்சை நிறம்

பெரும்பாலான கட்டடங்களிலும் இடங்களிலும் நுழைவாயிலைக் குறிக்கும் பலகை பச்சை நிறத்தில் இருக்கும்.

பச்சை நிறம் மனத்துக்கு அமைதி தரும் நிறம். அனுமதி கொடுப்பதையும் அது பெரும்பாலும் குறிக்கும்.

நுழைவாயில் வழி பாதுகாப்பாக வெளியேறலாம் என்பதைக் குறிக்க பலகை பச்சை நிறத்தில் இருக்கிறது.

2. மருத்துவ வாகனங்களின் வெள்ளை நிறம்

மருத்துவ வாகனங்கள் சுத்தமாக இருப்பது அவசியம்.

நோயாளி இருக்கும் இடத்தை நோக்கி மருத்துவ வாகனம் விரைந்து செல்லும்போது மற்ற வாகனங்கள் அதனைக் கவனித்து வழிகொடுப்பது அவசியம்.

இதனால் சுத்தத்தைப் பிரதிபலிக்கும் நிறமாகவும் மற்ற வாகனங்களிடமிருந்து வேறுபடுத்தும் நிறமாகவும் வெள்ளையில் இடம்பெறுகின்றன மருத்துவ வாகனங்கள்.

3. தீ அணைப்பான்களுக்குச் சிவப்பு நிறம்

மனிதப் பார்வைக்குத் தெளிவாக தெரியக்கூடிய நிறங்களில் ஒன்று சிவப்பு.

தீச்சம்பவங்கள் போன்ற குழப்பமான வேளைகளில் கண்ணுக்கு உடனடியாகத் தெரியவேண்டும் என்பதற்காகத் தீயணைப்பான் சிவப்பு வண்ணத்தில் இருக்கிறது.  


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்