Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கெட்டிப்பால் (Condensed milk) - தெரிந்ததும் தெரியாததும்

Condensed பால் நல்லதா?

வாசிப்புநேரம் -

நம்மில் பலர் வெளியில் கடைகளில் காப்பி, தேநீர் அருந்துகிறோம். அவற்றில் சேர்க்கப்படுவது கெட்டிப்பால் (Condensed milk)  அல்லது Evaporated பால்.(கோப்பி C, தே C)

கெட்டிப்பால் எப்படித் தயாரிக்கப்படுகிறது? இது நல்லதா? இதில் சத்துக்கள் உள்ளனவா? ஆய்வுகள் என்ன கூறுகின்றன?

எப்படித் தயாரிக்கப்படுகிறது?

காய்ச்சப்பட்ட பாலில் அதிக அளவில் சர்க்கரையைச் சேர்த்து, பின் அதிலிருந்து 60 விழுக்காட்டுத் தண்ணீரை நீக்கும் செயல்முறையில் கெட்டிப்பால் கிடைக்கிறது. அதனால்தான் அது மிகவும் கொழகொழவென்று இருக்கிறது.

எதில் பயன்படுத்தப்படுகிறது?

சிங்கப்பூரில் பெரும்பாலும் அவை காப்பி, தேநீர் வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. சில இனிப்புவகைகளைத் தயாரிக்கவும் கெட்டிப்பால் பயன்படுத்தப்படுகிறது.

எப்படிக் கெட்டுப்போகாமல் இருக்கிறது?

காற்றை நீக்கும் செயல்முறையின் மூலம் (Vaccum) பால் தயாரிக்கப்பட்டு டின்னில் அடைக்கப்படுவதால், திறக்கப்படாத டின் பால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கிறது.

பாதுகாக்கும் முறை:

கெட்டிப்பாலைத் திறந்தபிறகு குளிர்பதனப் பெட்டியில் வைத்துவிடவேண்டும். ஒரு வாரத்துக்குள் பயன்படுத்திவிடுவது நல்லது.

சத்துக்கள்?
ஒரு டின் கெட்டிப்பாலில் 40-இலிருந்து 45 விழுக்காடு சர்க்கரை இருக்கிறது என்று கூறப்படுகிறது.

2 மேசைக்கரண்டி (38 கிராம்) கெட்டிப்பாலில் சுமார் 130 கலோரிக்கள் உள்ளன. 10 கிராம் மாவுச்சத்தும், சுமார் 3 கிராம் கொழுப்புச் சத்தும் உள்ளன. (அதில் 2 கிராம் கெட்ட கொழுப்பு). சிறிய அளவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் சத்துக்களும் உள்ளன.

மீதி என்ன என்கிறீர்களா? 38 கிராம் கெட்டிப்பாலில், 22 கிராம் சர்க்கரைதான்!

யார் எடுத்துக்கொள்ளலாம்?

நீரிழிவு நோய் இருப்பவர்கள் இதைச் சேர்க்கவே கூடாது. மேலும் இருதயப் பிரச்சினை, உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களும் குறைவான அளவு எடுத்துக்கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இளையர்களைப் பொறுத்தவரை, உடற்பயிற்சி அதிகம் செய்யாதவர்கள், உடற்பருமன் கொண்டோரும் கெட்டிப்பாலைத் தவிர்ப்பது நல்லது.

Evaporated பால், Creamer ஆகியவை குறித்து அடுத்தடுத்த வாரங்களில் தெரிந்துகொள்வோம்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்