Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

சிங்கப்பூரில் முதல் முறையாக Cookie Monster கேலிச்சித்திரக் கதாபாத்திரம்

பிள்ளைகளிடையே பிரபலமான Sesame Street கேலிச்சித்திரத்தைச் சேர்ந்த Cookie Monsterரும் அதனை இயக்கும் கைப்பாவைக் கலைஞர் David Rudmanனும் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் முதல் முறையாக Cookie Monster கேலிச்சித்திரக் கதாபாத்திரம்

படம்: Sesame Street

பிள்ளைகளிடையே பிரபலமான Sesame Street கேலிச்சித்திரத்தைச் சேர்ந்த Cookie Monsterரும் அதனை இயக்கும் கைப்பாவைக் கலைஞர் David Rudmanனும் சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளனர்.

Sesame பயிலரங்கு ஏற்பாடு செய்துள்ள அனைத்துலக முன்னெடுப்பு, சமூக ஊடக இயக்கத்தின் ஓர் அங்கமாக அவர்கள் இங்கு வந்துள்ளனர். அனைத்துலக மக்களிடையே கனிவன்பைப் பரப்புவதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு வந்திருந்த Elmoவும் அதே இயக்கத்தின் அடிப்படையில் தான் வந்திருந்தது.

Cookie Monster இன்றும் நாளையும் தேசியக் கலைக்கூடம், கரையோரப் பூந்தோட்டம், மரினா பே சாண்ட்ஸ் ஆகிய இடங்களில் வலம் வரும். Universal Studios Singaporeரிலும் பிள்ளைகளுக்காக ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்