Images
  • makeup 2
    (படம்: Pixabay)

அமெரிக்காவிலும் கனடாவிலும் விற்கப்படும் முக ஒப்பனைப் பொருள்களில் அதிகளவிலான நச்சுப்பொருள் கண்டுபிடிப்பு

அமெரிக்காவிலும் கனடாவிலும் விற்கப்படும் முக ஒப்பனைப் பொருள்களில் அதிகளவிலான நச்சுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Notre Dame பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், அதிகமாகப் பயன்படுத்தப்படும் 230க்கும் மேற்பட்ட முக ஒப்பனைப் பொருள்களை சோதித்துப்பார்த்தனர்.

அதில் சுமார் 45 விழுக்காட்டுப் பொருள்களில் அதிகளவிலான ஃபுளோரின் (fluorine) என்ற நச்சுப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண் இமைகளில் பூசக்கூடிய நீர்புகா மஸ்காரா (waterproof mascara) என்ற ஒப்பனைப் பொருளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான ஃபுளோரின் உள்ளதாகச் சோதனைகளின் மூலம் தெரியவந்தது.

அந்த நச்சுப்பொருளால், பலவிதமான உடல் சுகாதாரக் குறைபாடுகள் ஏற்படக்கூடும் எனப் பொதுச் சுகாதார ஆய்வுகள் சுட்டியுள்ளன.

புற்றுநோய், குறைந்த எதிர்ப்புச்சக்தி, குறைந்த பிறப்பு எடை போன்றவற்றை ஃபுளோரின் ஏற்படுத்தலாம். 

Top