Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 34 விழுக்காட்டினருக்கு நரம்பியல் அல்லது மனநலப் பிரச்சினை - ஆய்வு

The Lancet Psychiatry இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், மற்ற சுவாசக்கோளாறு சம்பந்தப்பட்ட கிருமித்தொற்றுகளைவிடக் கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்புற்றவர்களுக்கு மூளை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த 230,000 பேரிடம் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 34 விழுக்காட்டினருக்கு மூளை சம்பந்தப்பட்ட நோயோ, மனநோயோ ஆறு மாதங்களில் ஏற்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வின் மூலம், கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 17 விழுக்காட்டினருக்கு மனப்பதற்றம் (anxiety) இருந்ததாகவும், 14 விழுக்காட்டினருக்கு மனநிலைக் கோளாறு ஏற்பட்டதாகவும் (mood disorder) தெரியவந்தது.

அது போன்ற கிருமித்தொற்றால் ஏற்படக்கூடிய நாள்பட்ட மனநோய்களையும் மூளைக்கோளாறுகளையும் சமாளிப்பதற்கு மருத்துவ அமைப்புமுறை தயாராக இருக்கவேண்டும் என ஆய்வை வழிநடத்திய திரு. பால் ஹாரிசன் சுட்டினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்