Images
  • Crazy Rich Asians
    (படம்: Reuters)

கோல்டன் குளோப் விருதுக்கு நியமனம் பெற்றுள்ள Crazy Rich Asians

திரையரங்குகளில் அதிக வசூலை அள்ளிய Crazy Rich Asians திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு நியமனம் பெற்றுள்ளது.

சிறந்த நகைச்சுவை அல்லது இசைசார்ந்த திரைப்படத்திற்கான பிரிவிலும் சிறந்த நடிகைக்கான பிரிவிலும் இந்தப் படம் நியமனம் பெற்றது.

திரைப்படத்தின் முக்கிய நடிகை கான்ஸ்டன்ஸ் வூ (Constance Wu).

ஐம்பதாண்டுகளுக்கு மேல் முதல்முறையாக ஆசிய அமெரிக்கர் ஒருவர் சிறந்த நடிகைப் பிரிவில் நியமனம் பெற்றிருப்பது இது முதல்முறை.

கெவின் குவான் (Kevin Kwan) எழுதிய ஒரு நூல் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டது. அதன் படப்பிடிப்பின்போது பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூரில் எடுக்கப்பட்டன.

Top