Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

போகிப் பண்டிகை - சில தகவல்கள்

பொங்கல் திருநாளுக்கு முந்தை நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று போகி கொண்டாடப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
போகிப் பண்டிகை - சில தகவல்கள்

போகிப் பண்டிகைக்காக பழைய பொருட்கள் தீயில் எரிக்கப்படுகின்றன.(நன்றி: தந்தி டி.வி)

பொங்கல் திருநாளுக்கு முந்தை நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று போகி கொண்டாடப்படுகிறது.

பழைய துயரங்களை அழிப்பதற்கான இந்தப் பண்டிகையைப் "போக்கி' என்று பழங்காலத் தமிழர்கள் அழைத்தனர். அந்தச் சொல், பிறகு போகி என்று மருவிற்று. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. ஒருங்கிணைந்த தூய்மைப் பணியினை ஒட்டுமொத்த மக்களும் ஈடுபடும் ஒரே நேரமிது. 

குப்பைகளை தீயில் எரிப்பது, போகியன்று மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கம். அண்மை ஆண்டுகளில் சுற்றுப்புறத் தூய்மை பற்றிய அக்கறைகளால் அந்த வழக்கம் பலரால் நிராகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்புறத் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக போகிப் பண்டினை தினம் மாறி வருகிறது. 

தூய்மையை எடுத்துரைக்கும் போகி, சுற்றுப்புற பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக உருவெடுத்து வருவது பெருமைக்குரியது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்