Images
  • bicycle cycle
    (படம்: AFP)

சைக்கிள் ஓட்டுநர்களுக்கு சாலைகளும் சொந்தமில்லை, நடைபாதைகளும் சொந்தமில்லை-ஆய்வு

சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு, அரசாங்கம் கூடுதல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தவறான முறைகளில் சைக்கிள் ஓட்டுபவர்கள் சாலைகளில் அதிகமானோர் இருக்கின்றனர் என்றும் ஆய்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

"டாக்கிங் பாயிண்ட்" (Talking point) என்ற நிகழ்ச்சிக்காக அந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கருத்தாய்வில் பங்கெடுத்தவர்களில் 90 விழுக்காட்டினருக்கு மேல், சைக்கிள் ஓட்டுநர்கள் அதிகமான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார்கள்.

இருப்பினும், பெரும்பாலானோர் சைக்கிள் ஓட்டுபவர்களை சாலைகளிலும், நடைபாதைகளிலும் அனுமதிக்கக்கூடாது எனக் கருதுகின்றனர்.

பொதுவாக சிங்கப்பூரில் ஓய்வுக்காகவும் உடற்பயிற்சிக்காகவும் பலர் சைக்கிளை ஓட்டுவதாகக் கூறுகின்றனர்.

சிங்கப்பூரிலுள்ள சைக்கிள் ஓட்டும் பாதைகள் 2023க்குள் 800 கிலோமீட்டருக்கு மேல் விரிவடையும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) தெரிவித்துள்ளது.

தற்போது அது 460 கிலோமீட்டராக உள்ளது.

வீடுகள், பெருவிரைவு ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் பள்ளிகள் ஆகிய வசதிகளை இந்தப் பாதைகள் இணைக்கும்.

"டாக்கிங் பாயிண்ட்" நிகழ்ச்சி தொலைக்காட்சி ஒளிவழியில்/சேனல் 5 இல் இன்று இரவு 9.30 மணிக்கு ஒளியேறும்.  

Top