Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

'தர்பார்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவரும் 'தர்பார்' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது. 

வாசிப்புநேரம் -
'தர்பார்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

படம்: Darbar/Youtube

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவரும் 'தர்பார்' திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று வெளியானது. சிங்கப்பூர் நேரப்படி இரவு 9 மணிக்கு வெளியான முன்னோட்டத்தை இதுவரை 460,000க்கும் அதிகமான முறை பார்வையிடப்பட்டுள்ளது.

படத்தை  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.  இதுவே ஏ.ஆர். முருகதாஸும் ரஜினிகாந்தும் இணையும் முதல் திரைப்படம்.

அனிருத் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் திரைப்படம் வெளிவரப்போகிறது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் இரண்டாவது திரைப்படம் இது. நயன்தரா, யோகி பாபு ஆகியோரும் படத்தில் இடம்பெறுகின்றனர்.

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் 'தர்பார்' , ரஜினி நடிக்கும் 167ஆவது திரைப்படம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்