Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

வாழ்வியல்

தீபாவளியன்று முகக்கவசத்துடன் ஈர்க்கும் வகையில் ஒப்பனை செய்துகொள்ளலாம்....இப்படி!

தீபாவளி அன்று அழகாக உடை உடுத்தி, அலங்கரித்து, ஒப்பனை செய்துகொண்டு படங்கள் எடுப்பதும், வீடுகளுக்குச் செல்வதும் நம்மில் பலருக்கு வழக்கம். 

வாசிப்புநேரம் -

தீபாவளி அன்று அழகாக உடை உடுத்தி, அலங்கரித்து, ஒப்பனை செய்துகொண்டு படங்கள் எடுப்பதும், வீடுகளுக்குச் செல்வதும் நம்மில் பலருக்கு வழக்கம்.

குறிப்பாக, நம் இந்தியப் பெண்கள் ஆடைக்கு ஏற்ற முக ஒப்பனை செய்துகொள்ள விரும்புவர்.

ஆனால், முகக்கவசத்துடன் அது சாத்தியமாகுமா? எப்படி முக ஒப்பனை செய்துகொள்வது?

நிபுணர்கள் கூறும் சில குறிப்புகள்...

முகக்கவசத்தை அணியும்போது, கண்கள் மீதே முதலில் கவனம் செலுத்தப்படுகிறது. இமைகளுக்கு Eye shadow, கண்களுக்கு Eyeliner, Mascara ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் புருவத்தைத் திருத்துவதும் முக்கியம்.

Eye liner-ஐ பல்வேறு வண்ணங்களில் பயன்படுத்தலாம்.
எந்தவொரு உதட்டுச் சாயத்திற்கும் பொருந்தும் வகையில், முன்னர் கறுப்பு Eye liner மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

கண் இமைகளுக்கு மினுமினுக்கும் (shimmer) Eyeshadow-வைப் பயன்படுத்தலாம்.
அதை இமையின் நடுப்பகுதியில் தடவினால், கண்களுக்குக் கவர்ச்சியைக் கொடுக்கும்.

கண் புருவத்திற்கு இலேசாக வண்ணம் சேர்க்கலாம்.

முகக்கவசத்தை அணிவதால் உதட்டுச் சாயத்திற்கு இடமில்லை. எனவே உதடுகளில் ஈரப்பதம் கொடுக்கும் Lip Moisturiser மட்டும் பூசுவது சிறந்தது.

(படம்: Pixabay)

ஈரப்பதம் கொண்ட Foundation-ஐப் போன்று, சருமத்திற்குத் தகுந்த சில ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்தலாம். அதிகமான ஒப்பனைப் பொருள்களைப் பயன்படுத்தினால், முகக்கவசம் அணியும்போது, அது 'pores' எனும் துளைகளை அடைக்கலாம்.

சிகை அலங்காரத்தில் கூடுதல் கவனம் செலுத்தலாம். தலைமுடியைக் காய வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கருவியைக் (Hair dryer)கொண்டு விருப்பமான சிகை அலங்காரத்தைச் செய்துகொள்ளலாம்.

காதணிகளை விடுத்து, அட்டிகை, சங்கிலி, வளையல் ஆகியவற்றைப் பெரிதாக அணியலாம்.

முகக்கவசம் அணிந்தாலும், அழகாகத் தோற்றமளிக்க ஆயிரம் வழிகள் உள்ளன என்கின்றனர் அழகுப் பராமரிப்பாளர்கள்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்